ஐபிஎல் 2025

16.4 ஓவரில்153 ரன் சேசிங்.. சன்ரைசர்ஸ் பவுலிங்கை வெளுத்த ரூதர் போர்டு.. வாஷிங்டன் சுந்தர் ஸ்பெஷல் கேமியோ.. ஜிடி ஹாட்ரிக் வெற்றி

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

- Advertisement -

இதில் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சன்ரைசர்ஸ் அணியை தோற்கடித்தது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மான் கில் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். ஏற்கனவே முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கும் சன்ரைசர்ஸ் அணிக்கு இது முக்கிய போட்டியாக அமைந்தது. இருப்பினும் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஜோடி இந்த முறையும் நீடிக்கவில்லை. ட்ராவிஸ் ஹெட்டை 8 ரன்னில் முகமது சிராஜ் வெளியேற்ற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவை 18 ரன்னில் முகமது சிராஜ் வீழ்த்தினார்.

அதற்குப் பின்னர் களம் இறங்கிய சன் ரைசர்ஸ் வீரர்கள் அனைவரும் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறத் தொடங்கினார்கள். அதிகபட்சமாக நிதீஷ் குமார் ரெட்டி 31 ரன்கள் குவித்தார். இறுதிக்கட்டத்தில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்ததால் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது. குஜராத் அணியில் சிராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய குஜராத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் இந்த முறை 5 ரன்னில் முகமது சமி பந்துவீச்சில் வெளியேறினார். அதற்குப் பின்னர் களமிறங்கிய பட்லர் கம்மனஸ் பந்து வீச்சில் டக் அவுட் ஆகி வெளியேற, இந்தப் போட்டியில் முதல்முறையாக வாய்ப்பு கிடைத்த வாஷிங்டன் சுந்தர் ஒரு பந்து கூட வீசாமல் நேரடியாக மிடில் வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடினார்.

இதையும் படிங்க:தோனி சொன்ன அந்த விஷயம் அவருக்கே நடந்தா.. அவர் ஓய்வு பெற தேவையில்லை – இந்திய முன்னாள் வீரர் பேட்டி

சிமர்ஜீத் பந்து வீச்சில் ஒரே ஓவரில் 20 ரன்கள் எடுத்து அவர் இறுதியாக 29 பந்துகளில் 49 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் கடைசி வரை ஆட்டம் இழக்காத அணியின் கேப்டன் கில் சிறப்பாக விளையாடி 43 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இறுதி கட்டத்தில் களமிறங்கிய ரூதர் போர்டு 16 பந்துகளில் 35 ரன்கள் குவித்து குஜராத் அணியை எளிதாக வெற்றி பெற வைத்தார். இதனால் 16.4 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 153 ரன்கள் குவித்து குஜராத் அணி வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் அணிக்கு இது நான்காவது தொடர்ச்சியான தோல்வி ஆகும். குஜராத் அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும்.

- Advertisement -
Published by