3 தமிழக வீரர்கள் அசத்தல் பெர்பார்மன்ஸ்.. ஹெட்மயர் போராட்டம் வீண்.. 58 ரன்னில் வெற்றி பெற்று குஜராத் நம்பர் 1 இடத்திற்கு ஏற்றம்

0
533

நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 23வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி விளையாடின.

இதில் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

- Advertisement -

குஜராத் ராஜஸ்தான் மோதல்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய குஜராத் அணிக்கு தொடக்க வீரர் கேப்டன் கில் 2 ரன்னில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் மற்றும் பட்லர் கூட்டணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 47 பந்துகளில் 80 ரன்கள் குவித்தது.

இதில் ஜாஸ் பட்லர் 36 ரன்னில் ஆட்டம் இழக்க, அதற்கு பிறகு களம் இறங்கிய ஷாருக்கான் 20 பந்துகளில் 36 ரன்கள் குவித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சாய் சுதர்சன் 32 பந்துகளில் அரை சதம் கடந்த நிலையில் இறுதியாக 53 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 82 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதனால் இறுதியாக குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது.

- Advertisement -

58 ரன்னில் சிறப்பான வெற்றி

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 6 ரன்னில் விளையாடிக் கொண்டிருந்தபோது அர்சத் கான் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் கேப்டன் சஞ்சு சாம்சன் ஒரு முனையில் நின்று போராட மறுமுனையில் நித்திஷ் ரானா 1 ரன், ரியான் பராக் 14 பந்துகளில் 26 ரன்னில் ஆட்டம் இழந்தனர். அதற்குப் பிறகு துருவ் ஜுரைல் 5 ரன்னில் ஆட்டம் இழக்க, ஹெட்மயர் சாம்சன் உடன் போராடினார்.

இதையும் படிங்க:பும்ரா இல்லை.. அந்த கேகேஆர் வீரர்தான் பவுலிங்கில் என்னை மிரட்டுனாரு – விராட் கோலி சுவாரசியமான தகவல்

இதில் எதிர்பாராத விதமாக சாம்சன் 41 ரன்னில் ஆட்டம் இழக்க, கடைசி கட்டத்தில் ஹெட்மயர் 32 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 52 ரன்னில் ஆட்டம் இழந்து ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை தளர்ந்தது. இதனால் இறுதியாக ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 159 ரன்கள் மட்டுமே குவித்து 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சிறப்பான வெற்றியை பதிவு செய்த குஜராத் அணி தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. பந்துவீச்சில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மொத்தமாக இந்த போட்டியில் மூன்று தமிழக வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -