ஐபிஎல் 2025

ஆர்சிபி-யால் நின்ற திருமணம்.. மணமகனின் வினோத காரியம்.. ஐபிஎல் இறுதிப் போட்டியில் சுவாரசியம்

ஐபிஎல் வரலாற்றில் 18வது ஆண்டில் முதல் முறையாக ஆர்சிபி அணி முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. இந்த நிலையில் மணமகன் ஒருவர் ஆர்சிபி அணிக்காக தன்னுடைய திருமண சடங்குகளை நிறுத்திய வினோதமான சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் ஐபிஎல் தொடரில் மும்பை, சென்னை இரண்டு வெற்றிகரமான அணிகளுக்கு அடுத்து கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணிக்கு மிக அதிகபட்ச ரசிகர்களும் சந்தை மதிப்பும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே முக்கியமான அணியாக இருந்தும் கோப்பையை வெல்லாதது வெளியில் நிறைய கேலி கிண்டல்களை உருவாக்கியிருந்தது.

வரலாற்றை மாற்றிய ஆர்சிபி

இந்த முறை ஆர்சிபி ஐபிஎல் மெகா ஏலத்தில் மிகவும் திறமையாக செயல்பட்டு தங்களுக்கு தேவையான வீரர்களை மட்டுமே சென்று வாங்கியது. வேறு எந்த வீரர்களை வாங்குவதற்கும் முயற்சியே செய்யவில்லை. குறிப்பாக தங்கள் மைதானத்திற்கு மட்டுமல்லாமல் வெளியிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களை வாங்கியது.

காரணமாக இனி ஐபிஎல் தொடரில் யாராலும் செய்வதற்கு மிகவும் கடினமான வெளியில் தொடர்ந்து ஒன்பது போட்டிகளை வென்று சாதித்து இருக்கிறது. மேலும் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் வென்று விட்டது. இதனை அடுத்து இந்தியா முழுக்க இருக்கும் ஆர்சிபி ரசிகர்கள் இதை மிகப்பெரிய கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

- Advertisement -

திருமணத்தை நிறுத்திய மணமகன்

இந்த நிலையில் நேற்று இறுதி போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெறுவதற்கு மிக நெருக்கத்தில் இருந்தது. இப்பொழுது விராட் கோலி வெற்றியை உறுதியானதும் மைதானத்தில் கண்ணீர் விட்டு வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அங்கிருந்து ஆர்சிபியின் வெற்றி கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டது.

இதையும் படிங்க : எனக்கு அதிகம் நேரமில்லை.. நான் சொல்ற ஒரு விஷயத்தை கேளுங்க – விராட் கோலி உருக்கமான பேச்சு

இந்த நிலையில் இதே நேரத்தில் ஆர்சிபி ரசிகர் ஒருவரின் திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்திருக்கிறது. இந்த நிலையில் தன் அணியின் வெற்றி கொண்டாட்டத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக திருமண சடங்குகளை நிறுத்திவிட்டு, மணமகன் வெளியில் சென்று வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அந்த அளவிற்கு ஆர்சிபி அணிக்கு மிகவும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -
Published by
Tags: RCB

Recent Posts