இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற இந்தியாவும் ஆஸ்திரேலியா அணியும் மிகத்தீவரமாக தயாராகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ராவை டிராவிஸ் ஹெட் எதிர்கொள்ளும் விதம் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபி தொடரில் இந்திய அணியில் பும்ராவும் ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட்டும் தங்களது அணிக்காக மிகச் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா இதுவரை 21 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ஆஸ்திரேலியா அணி வீரர் ட்ராவிஸ் ஹெட் இரண்டு முறை சதம் மற்றும் ஒரு அரை சதம் என மொத்தமாக இந்த தொடரில் 409 ரன்கள் குவித்திருக்கிறார்.
இந்த இரண்டு வீரர்களுமே தங்கள் அணிக்காக சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் பும்ராவை டிராவிஸ் ஹெட் எதிர்கொண்டு விளையாடுவதாகவும் சாதாரண பந்துவீச்சாளரை போல அவரை வழி நடத்துவதாகவும் நம்புகிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் இவர் சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருப்பதாகவும் அடுத்த ஆஸ்திரேலியா அணிக்கான கேப்டனாக வருவதற்கு அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பும்ராவுக்கு எதிரா ஹெட் இதை செய்கிறார்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த டெஸ்ட் தொடரில் ட்ராவிஸ் ஹெட் பும்ராவுக்கு எதிராக விளையாடும் விதம், அவரது அச்சமற்ற அணுகுமுறையை காட்டுகிறது. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் பும்ராவின் வழக்கத்திற்கு மாறான ஆக்சன், கூர்மையான வேகம் மற்றும் இடைவிடாத துல்லியம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க போராடும்போது ஹெட் இவரை மற்ற பந்து வீச்சாளர்களைப் போலவே நடத்துகிறார்.
இதையும் படிங்க:கோலி ஸ்மித் செஞ்ச இதை கவனிக்கனும்.. இதுதான் இப்போ அவருக்கு தேவை – ரவி சாஸ்திரி பேட்டி
அவருக்கு எதிராக சிறப்பாக விளையாடி வருவதன் மூலமாக ஹெட் பும்ராவின் ரிதத்தை சீர்குலைத்துள்ளார் என்று நம்புகிறேன். ஹெட்டுக்கு வீசப்படும் ஷாட் பந்துகளை எதிர்கொண்டு முழு அதிகாரத்துடன் விளையாடுவது அவரது துல்லியமான பேட்டிங்கை குறிக்கிறது. இது அவர் தனது பேட்டிங்கில் செய்த முன்னேற்றங்களை அடிக்கடி காட்டுகிறது” என்று கூறி இருக்கிறார். ஆனால் அதே ஹெட் பும்ராவின் பந்துவீச்சில் இரண்டு முறை ஆட்டம் இழந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






