ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் விளையாடக்கூடிய வீரர்களில் மிகவும் முக்கியமானவர் டேவிட் வார்னர். 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் டெல்லி அணியில் விளையாடிய அவர்,2014 முதல் 2023-ம் ஆண்டு வரை ஐதராபாத் அணியில் விளையாடினார்.
டெல்லி அணியை விட ஐதராபாத் அணியில் அவர் மிக சிறப்பாகவே விளையாடி இருக்கிறார். 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஆறு வருடமும் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் 500க்கும் மேற்பட்டவர்கள் படைத்த சாதனையை அவர் தன் கைவசம் வைத்துள்ளார்.
குறிப்பாக 2014 ஆம் ஆண்டு 17 போட்டிகளில் 247 ரன்கள் குவித்தது மட்டுமல்லாமல் அந்த ஆண்டு அணியை மிக சிறப்பாக வழிநடத்தி கோப்பையையும் கைப்பற்றி கொடுத்தார். ஆனால் கடந்த ஆண்டு அவர் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை 8 போட்டிகளில் விளையாடி 192 ரன்கள் மட்டுமே குவித்தார். அதன் காரணமாகவே ஹைதராபாத் அணி அவரை தக்கவைத்துக் கொள்ளவில்லை.
குறைந்த விலையில் அவரை கைப்பற்றிய டெல்லியில் நிர்வாகம்
ஏலத்தில் 6 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு டெல்லி அணி அவரை இன்று கைப்பற்றியது. டேவிட் வார்னர் நிச்சயமாக 10 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போவார் என்று அனைவரும் இடத்தில் நிலையில் மிக குறைந்த விலையில் அவர் ஏலம் போனது அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
David Warner to play for @DelhiCapitals great pick at almost peanut price for a great player …Big Match Winner 💥💥💥💥💥 well done Delhi
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 12, 2022
இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் டேவிட் வார்னர் டெல்லி அணி மூலமாக கைப்பற்றப்பட்டுள்ளார். “வேர்க்கடலையை வாங்குவது போல் மிக குறைந்த விலையில் டெல்லி நிர்வாகம் அவரை சாமர்த்தியமாக வாங்கியுள்ளது. அவர் ஒரு மேட்ச் வின்னர் அதுமட்டுமல்லாமல் சாம்பியன் வீரர் அவர். அவருக்கும் டெல்லி அணி நிர்வாகத்திற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்”, என்று தன்னுடைய டுவிட்டர் வலைதளத்தில் ஹர்பஜன்சிங் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
கடைசியாக 2013ம் ஆண்டு டெல்லி அணியில் விளையாடிய டேவிட் வார்னர் சுமார் எட்டு வருட காலம் கழித்து மீண்டும் அதே டெல்லி அணியில் களமிறங்கி விளையாடப் போகிறார். டெல்லி அணியில் அவர் விளையாட போகும் செய்தி டெல்லி அணியை ரசிகர்களை அளவற்ற மகிழ்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.