இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் மும்ராவுக்கு பிசிசிஐ குறிப்பிட்ட கௌரவத்தை கொடுப்பதற்கு முன்னாள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் என முகமது கைஃப் அதிரடியாக கூறியிருக்கிறார்.
தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் காயமடைந்த பும்ராவின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று இதுவரையில் அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. மேலும் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா என்றும் தெரியவில்லை.
பும்ரா கேப்டன் பதவிக்கு சிக்கல்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதல் மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக பும்ரா செயல்பட்டு ஒரு போட்டியில் வென்று ஒரு போட்டியில் தோல்வி அடைந்தார். காயத்தின் காரணமாக கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் அவர் பந்து வீசாதது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது. இல்லையென்றால் முடிவுகள் மாறி இருக்கலாம்.
இந்த நிலையில் உறுதியாக டெஸ்ட் கேப்டன் பதவிக்கு பும்ராவை கொண்டு வந்து விட வேண்டும் என்கின்ற நிலை காணப்பட்ட சூழலில், அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயம் அச்சத்தை தருவதாக இருக்கிறது. அவரை அளவாக பயன்படுத்த வேண்டிய சூழலை உருவாக்கி இருக்கிறது. இதனால் மீண்டும் அவருக்கு கேப்டன் பதவி கொடுப்பதில் சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது.
அகர்கர் மாற்று யோசனை
இந்த சூழ்நிலையில் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் இருவரில் ஒருவரை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கொண்டுவர யோசிக்கிறார் என்கின்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது. மேலும் பும்ராவுக்கு கேப்டன் பதவி வழங்க யோசிக்க வேண்டும் என முகமது கைஃப் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : 30 ஓவர் பரிதாபம்.. கெத்து காட்டிய நியூசிலாந்து.. இலங்கை அணி மோசமான தோல்வி.. தொடரை இழந்தது
இதுகுறித்து ட்விட் செய்திருக்கும் முகமது கைஃப் அதில் தெரிவிக்கும் பொழுது “பும்ராவை முழு நேர கேப்டனாக நியமிப்பதற்கு முன்னால் பிசிசிஐ ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். அவர் விக்கெட்ஸ் எடுப்பதிலும், தன்னுடைய உடல் தகுதியை பராமரிப்பதில் மட்டுமே அதிக கவனத்தை செலுத்த வேண்டும். அவருக்கு கூடுதல் பொறுப்பை கொடுப்பது அவருக்கு கூடுதலாக வேலை செய்யும் சூழலை ஏற்படுத்தும். இதனால் அவர் காயமடையும் ஆபத்து உருவாகும். தங்க முட்டையிடும் வார்த்தை கொல்லக் கூடாது” என்று கூறி இருக்கிறார்.






