“எங்கேயும் போக வேண்டாம்” – முன்னாள் வீரர்களுக்கு ஜாகீர் கான் பதிலடி!

0
2132
Zakir khan

இந்திய அணி ஆஸ்திரேலியாலில் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையின் அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து வெளியேறி இருந்தது. இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியின் வெள்ளை பந்து கிரிக்கெட் அணுகுமுறை பற்றியும், துவக்க வீரர்கள் பற்றியும் அதிக அளவில் விமர்சனங்கள் இருந்தன!

இந்திய அணியுடனான அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியின் ஒரு துவக்க ஆட்டக்காரரான அலெக்ஸ் ஹலஸ் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இவர் ஊக்க மருந்து பிரச்சனையில் சிக்கி 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்குப் பிறகு இவருக்கு இங்கிலாந்து அணியில் கேப்டன் மோர்கன் தலைமையில் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

- Advertisement -

இந்த நிலையில் இவர் உலகெங்கும் நடக்கும் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வந்தார். நடந்து முடிந்த டி20 உலக கோப்பைக்கு முன்பு எதிர்பாராத விதமாக ஜானி பேர்ஸ்டோ காயம் அடைய இவர் அணியில் இடம் பெற்று சிறப்பாகவும் செயல்பட்டார். இவர் ஆஸ்திரேலியா டி20 தொடரான பிக் பாஷ் தொடரில் விளையாடிய அனுபவம், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முடிந்த டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாட உதவி செய்ததாக கூறியிருந்தார்.

இவரது இந்த கருத்து பல வீரர்களிடம் இந்திய அணியின் வீரர்கள் வெளிநாட்டு டி20 தொடர்களில் பங்கேற்று விளையாட வேண்டும் என்ற கருத்தை உருவாக்கியது. இந்திய அணியின் வாஸிம் ஜாபர், ரவி சாஸ்திரி போன்றோர் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். அதே சமயத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இதற்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பிரபல வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் கூறும்பொழுது ” இங்கு நிறைய செயல்முறைகள் உள்ளதாக நான் நினைக்கிறேன். இது வெறும் உரிமையாளர் டி20 கிரிக்கெட் தொடர் விளையாடுவது மட்டும் கிடையாது. வீரர்கள் விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு வெளிநாடு செல்வது தொடர்பானது. இது மிக முக்கியமான ஒன்றுதான். பிசிசிஐயின் சுற்றுப்பயண விவரங்களை எடுத்துப் பார்த்தால் அது மிக நன்றாக உள்ளதாக நான் நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட தொடருக்காக வீரர்கள் வெளியே சென்று விளையாடுவதற்கு எந்த காரணமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உள்நாட்டில் தற்போது வலுவான கிரிக்கெட் அமைப்பு இருக்கிறது. இப்படி இருக்கும்போது நாம் ஏன் மற்ற வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களை விஷயங்களைக் கற்றுக் கொள்ள நம்பி இருக்க வேண்டும்? ” என்று கேட்டிருக்கிறார்…

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இங்குள்ள வீரர்கள் இந்திய அணியில் இடம் பெறவும் விளையாட வாய்ப்பு பெறவும் போதுமான கிரிக்கெட் இந்தியாவில் இருக்கிறது. இரண்டு இந்திய அணிகளும் எதிர்காலத்தில் விளையாடலாம். இதனால் ஏறக்குறைய எல்லா வீரர்களுக்கும் விளையாட இங்கேயே நல்ல வாய்ப்பு கிடைக்கும். மேலும் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களும் நல்ல தரமாகவே இருக்கின்றன” என்று கூறியுள்ளார்.