இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை பார்த்து தங்களுக்கு பயம் கிடையாது என நியூசிலாந்து வீரர் கிளன் பிலிப்ஸ் தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான செமி பைனல் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா கடைசியில் பேசிய இரண்டு ஓவர்கள் மிக முக்கிய காரணமாக இருந்தது.
அவரும் ஒரு மனிதர்தான்
எனவே டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக பும்ரா பந்துவீச்சில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குவார் என ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் போன்றவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பெரிய போட்டிகளில் பும்ரா செயல்பாடு இதுவரையில் மிகச் சிறப்பாக இருந்து வந்திருக்கிறது.
இதுகுறித்து நியூசிலாந்து வீரர் கிளன் பிலிப்ஸ் பேசும் பொழுது “பும்ராவும் ஒரு மனிதர்தான்; அவருக்கும் ஒரு மோசமான நாள் இருக்கவே செய்யும். அதுபோல நமக்கும் இருக்கலாம். எனவே அவருக்கு எதிராக நமக்கும் ஒரு நல்ல நாள் அமையும் என்று நம்பலாம்”
கடந்த தொடரில் செய்தோம்
“நாங்கள் அவருக்கு எதிராக இரு நாடுகளுக்கு இடையேயான தொடரில் சிறப்பாக கடைசி தொடரில் விளையாடியிருக்கிறோம். ஆனால் அவர் ஒரு தரமான பந்துவீச்சாளர்; அவரிடம் பல வேரியேஷன் உள்ளது. இறுதி ஓவர்களில் அவர் சிறப்பாக பிளாக் ஹோல் பகுதியில் வீசுவார்”
இதையும் படிங்க : அபிஷேக் சாம்சன் கிடையாது.. ஃபைனல்ல அவரை தூக்கிட்டு இவரைக் கொண்டு வாங்க – முகமது கைஃப் வேண்டுகோள்
“அவருக்கு எதிராக நாங்கள் விளையாட வேண்டும் என்ற சூழ்நிலை இருக்காது. நான் முன்பே சொன்னது போல அவரும் ஒரு தவறு செய்யலாம்; அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம். அவர் சிறப்பாக பந்து வீசினால் நாங்கள் அதற்கு தகுந்தபடி விளையாடுவோம்” என்று கூறியிருக்கிறார்.






