ஐபிஎல் 2025

கில்லின் கேப்டன்சிக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. என் வழி ஜாண்டி ரோட்ஸ் வழி – பிலிப்ஸ் பேட்டி

கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் தோல்விக்கு கேப்டன் கில்லி எந்த வகையிலும் குற்றம் சொல்ல முடியாது என, அந்த அணியில் புதிதாக இணைந்திருக்கும் நியூசிலாந்து வீரர் கிளன் பிலிப்ஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வாங்கப்பட்ட அவருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தகுதி இருந்தும் பிளேயிங் லெவன் காம்பினேஷன் காரணமாக அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காதது அவருக்கு விரக்தியாக அமைந்தது.

குஜராத் தோற்க காரணம் இதுதான்

இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் குறித்தும், தான் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்படுவது குறித்து ஜாண்டி ரோட்ஸ் தனக்கு அளித்திருந்த பாராட்டுக் குறித்தும் கிளன் பிலிப்ஸ் சில முக்கியமான கருத்துகளை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு. குஜராத் அணியின் கடந்த வருட தோல்விக்கு கேப்டன்சி மட்டுமே காரணமாக இருந்து விட முடியாது. ஒரு அணியின் வெற்றிக்கு வீரர்கள் எந்த அளவில் பார்மில் இருக்கிறார்கள் என்பது மிக முக்கிய காரணியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். கடந்த ஆண்டு கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் என இரண்டு அணிகளும் நல்ல பார்மில் இருந்தன”

- Advertisement -

ஜாண்டி ரோட்ஸ் தந்த பாராட்டு

“குஜராத் அணியின் முதல் இரண்டு ஆண்டு வெற்றிகளில் நல்ல பார்மில் இருந்தார். அவர் விளையாடிய விதம் அருமையாக இருந்தது. அணியும் நல்ல பார்மில் இருந்தது. தற்போது கில்லுக்கும் அவரது தலைமையின் கீழ் இருக்கும் அழுத்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இந்திய அணியில் விளையாடுவதை விட பெரிய அழுத்தம் எதுவும் இருக்க முடியாது”

இதையும் படிங்க : நேத்து தோனி இருந்திருந்தா தெறிச்சிருக்கும்.. ஆனா பண்ட்டின் அந்த சூதாட்டத்த பாராட்டுறேன் – மைக்கேல் வாகன் கருத்து

“ஜாண்டி ரோட்ஸ் என் குறித்து வெளியிட்ட பதிவை பார்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிறிய வயதில் நாம் வியந்து பார்த்த ஒரு மனிதர் நம்மை பாராட்டுவது அருமையான விஷயம். அவர்தான் பீல்டிங்கில் ஒரு தரத்தை அமைத்தார். நான் அவரது அடிச்சுவடை பின்பற்ற முடியும் என்று நினைக்கிறேன். பீல்டிங் என்பதும் மிகவும் முக்கியமானது என்பதை நான் காட்ட விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts