ஆர்சிபி அணியில் தான் இணைப்பதற்கு முன்பாக விராட் கோலி உடன் தனக்கு எப்படி ஆன உரையாடல் அமைந்தது என்பது குறித்து ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் கூறி இருக்கிறார்.
2021 ஆம் ஆண்டு மினி ஏலத்தில் ஆர்சிபி அணி சிஎஸ்கே அணி உடன் மோதி 14.25 கோடி ரூபாய்க்கு மேக்ஸ்வெல்லை வாங்கியது. மேலும் அடுத்த ஆண்டு மெகா எலத்துக்கு முன்பாக மேக்ஸ்வெல்லை தாக்க வைத்துக் கொண்டது.
எங்களுக்குள் தகவல் தொடர்பு இருந்தது
இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறும்பொழுது “நானும் விராட் கோலியின் வெளிப்படையாகவே மெசேஜ் பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு இருந்தோம். எங்களை ஒருவருக்கு ஒருவர் உண்மையில் பிடித்து விட்டது. ஆஸ்திரேலியாவில் நடந்த வெள்ளை பந்து தொடரின் போது வாய்ப்பு இருந்தால் rcb அணிக்காக என்னை வாங்க விரும்புவதாக விராட் கோலி கூறியிருந்தார்”
“மேலும் அவர் என்னிடம் என்னை ஏலத்தில் வாங்கினால் அது ஆர்சிபி அணிக்கு அருமையான ஒன்றாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் நான் ஆர்சிபி அணிக்குள் அதிகாரப்பூர்வமாக வருவதற்கு நிறைய செயல்முறைகள் வெளியில் இருந்தது. அதிர்ஷ்டவசமாக நான் இப்பொழுது அந்த அணிக்காக விளையாடுகிறேன்”
நீங்கள் முட்டாள்கள் ஆனால் சிறப்பான வழியில் இருக்கிறீர்கள்
மேலும் பேசிய மேக்ஸ்வெல் கூறும்பொழுது ” ஏலம் நடந்த நாள் அன்று நாங்கள் நியூசிலாந்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அங்கு இரவு நேரம். ஆஸ்திரேலியா அணியில் என்னுடன் இருந்த ஆடம் ஜாம்பா ஆர்சிபி தொப்பியை வைத்திருந்தார். அவர் எனக்கு அணிவித்து போட்டோ எடுத்து அதை விராட் கோலிக்கு அனுப்பி விட்டு, ஆர்சிபி அணிக்கான தொப்பியை நான் மேக்ஸ்வெல்லுக்கு முன்பாக கொடுத்துவிட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்”
இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் கோச் மார்க் பவுச்சர் நீக்கம்.. புதிய கோச் அறிவிப்பு.. பின்னணியில் ரோகித் விவகாரமா?
“ஏலத்திற்கு முன்பாகவே இப்படியான புகைப்படத்தை அவர் கொடுத்தார். ஒருவேளை ஏலத்தில் நான் ஆர்சிபி அணிக்கு வாங்கப்படாமல் போயிருந்தால் அது மிகவும் வேடிக்கையானதாக இருந்திருக்கும். இதைப் பார்த்த விராட் கோலி ‘நீங்கள் முட்டாள்கள் ஆனால் அழகான வழியில் இருக்கக்கூடிய முட்டாள்கள்’ என்று குறிப்பிட்டார்” என்று கூறி இருக்கிறார்.