மும்பை இந்தியன்ஸ் கோச் மார்க் பவுச்சர் நீக்கம்.. புதிய கோச் அறிவிப்பு.. பின்னணியில் ரோகித் விவகாரமா?

0
1092
Rohit

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் அதிரடியாக நீக்கப்பட்டு புதிய தலைமை பயிற்சியாளர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியாக இருந்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சில வருடங்களாக மிகவும் மோசமான முறையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக அந்த அணி சில கடுமையான முடிவுகளை எடுக்க அது இன்னும் நிறைய சேதாரத்தை கொண்டு வந்தது. தற்பொழுது அந்த அணி நிர்வாகம் தனது தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சரை அதிரடியாக நீக்கி புதிய பயிற்சியாளரை கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக வெற்றிகரமான கேப்டனான ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து அணி நிர்வாகம் நீக்கியதில் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சருக்கு பெரிய பங்கு உண்டு என்று வெளியில் பேசப்பட்டது. மேலும் புதிய கேப்டனை கொண்டு வந்து புதிய அணிய உருவாக்க அவர் ஆர்வம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரோகித் சர்மா இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்து டி20 உலகக் கோப்பையை வென்றது, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கு பெரிய நெருக்கடிகளை வெளியில் உண்டாக்கி விட்டது. இப்பொழுது ரோகித் சர்மாவை வெளியில் விடவும் முடியாமல் அணிக்குள் கேப்டனாக மீண்டும் கொண்டு வரவும் முடியாமல் குழப்பத்தில் தவிக்கிறது.

- Advertisement -

புதிய தலைமை பயிற்சியாளர்

இப்படியான நிலையில் திடீரென தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சரை நீக்கி ஏற்கனவே தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் மிகவும் வெற்றிகரமாக இருந்த இலங்கையின் மகேல ஜெயவர்த்தனாவை கொண்டு வந்திருக்கிறது. இவருக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையில் சுமுகமான உறவு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 35/5.. புஜாரா டக் அவுட்.. பேட்டிங் பவுலிங் மாஸ் காட்டிய தமிழ்நாடு அணி.. இன்னிங்ஸ் வெற்றிக்கு வாய்ப்பு.. ரஞ்சி டிராபி 2024.

எனவே இவரை வைத்து ரோகித் சர்மாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் நிறுத்தி வைப்பதற்கான முயற்சிகளில் அந்த அணி நிர்வாகம் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் ரோஹித் சர்மாவை மீண்டும் கேப்டனாக கொண்டு வர முயற்சி செய்கிறார்களா? என்பது குறித்து எதுவும் வெளியில் கூறப்படவில்லை. ஏற்கனவே அணிக்குள் ஏற்பட்டிருந்த குழப்பங்களுக்கு மார்க் பவுச்சரை நீக்கி, தற்காலிகமாக ஒரு சமூக நிலையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள் என்று தெரிகிறது.

- Advertisement -