இந்திய அணியின் பேட்டிங் நட்சத்திரம் விராட் கோலி தன்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்து வைத்திருந்ததாகவும் தனக்கு அது தெரியாது எனவும், பின்பு அதற்கான காரணத்தை ஆர்சிபி அணிகள் தெரிந்து கொண்டதாகவும் கிளன் மேக்ஸ்வெல் கூறி இருக்கிறார்.
2021-ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி கிளன் மேக்ஸ்வெல்லை வாங்கியது. பிறகு 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை ஆர் சி பி அணி தக்க வைத்துக் கொண்டது. இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்திற்கு அவரை ஆர்சிபி அணி தக்க வைக்காது என்று தெரிய வருகிறது.
பெரிய ஏமாற்றத்தை கொடுத்த மேக்ஸ்வெல்
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஆர்சிபி அணிக்கு மேக்ஸ்வெல் பேட்டிங்கில் ஏமாற்றத்தை கொடுத்தார். அவர் பூஜ்ஜியத்தில் வெளியேறியதை விட, அவர் ஆட்டம் இழந்த விதம் ஆர்சிபி ரசிகர்களை கடுமையான கோபத்திற்கு உள்ளாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னை அணிக்கு வரவேற்றதையும் பிறகு அவர் தன்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்து இருந்ததையும், அதைச் சுற்றி என்ன நடந்தது என்பது குறித்து கிளன் மேக்ஸ்வெல் பேசியிருக்கிறார்.
விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்திருந்தார்
இது குறித்து மேக்ஸ்வெல் கூறும்பொழுது “நான் ஆர்சிபி அணிக்கு வருவது உறுதியானதும் எனக்கு மெசேஜ் செய்து விராட் கோலிதான் முதலில் வரவேற்றார். பிறகு அவருடன் இணைந்து நான் பயிற்சி முகாமில் பயிற்சி செய்தேன். நாங்கள் கலந்து பேசுவதற்கு சிறப்பான நேரங்கள் அமைந்தது. பிறகு நான் அவரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்ய தேடும்பொழுது அவர் பெயர் கிடைக்கவில்லை. அதற்கு முன்பாக அவரை பாலோ செய்ய எனக்கு தோன்றவில்லை”
“இன்ஸ்டாகிராமில் அவருடைய பெயரை நான் தேடி கிடைக்காத பொழுது, ஒருவர் என்னிடம் விராட் கோலி உங்களை பிளாக் செய்திருந்தால் மட்டுமே அவருடைய பெயரை நீங்கள் தேடும் பொழுது கிடைக்காது என்று கூறினார். விராட் கோலி என்னை பிளாக் செய்து இருப்பார் என்று என்னால் நம்ப முடியவில்லை”
இதையும் படிங்க : 2021 அஸ்வினை ஸ்லெட்ஜிங் பண்ணதுக்கு நான் வருத்தப்படலை.. ஏன்னா அவர் இதை செஞ்சார் – ஆஸி டிம் பெய்ன் பேட்டி
“பிறகு நான் இதை விராட் கோலி இடம் கேட்ட பொழுது அதற்கு அவர் ‘நீ டெஸ்ட் தொடரில் என்னிடம் கோபமாக நடந்து கொண்டாய். அதனால் உன்னை நான் இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்து விட வேண்டும் என செய்து இருக்கலாம்’ என்று சொன்னார். பிறகு அந்த இடத்தில் எல்லாம் சுமுகமாக முடிந்தது. அவரை நான் பாலோ செய்ய ஆரம்பித்தேன்” என்று கூறியிருக்கிறார்.