இந்த 2 பேருக்கு ஆசிய கப்ல வாய்ப்பு குடுங்க.. உலக கோப்பைல கழட்டி விட வசதியா இருக்கும் – இறங்கி அடிக்கும் கபில்தேவ்!

0
3174
Kapil Dev

பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் நடத்தப்பட இருக்கும் ஆசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது!

இந்த அணியில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது முதுகில் காயமடைந்து அதற்குப் பிறகு ஐபிஎல் தொடரையும் தவறவிட்ட இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பியிருக்கிறார்.

- Advertisement -

இவரைப்போலவே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தொடையில் காயமடைந்து பாதியில் வெளியேறிய கேஎல் ராகுல் காயம் குணமடைந்து மீண்டும் அணிக்கு வந்திருக்கிறார்.

தற்போது இந்த இருவரில் கே எல் ராகுலுக்கு காயம் குணமடைந்து இருந்தாலும் அவருக்கு சிறிது நிக்கில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இவருக்கு பேக்கப் வீரராக சஞ்சு சாம்சன் அழைத்துச் செல்லப்படுகிறார்.

இந்த நிலையில் இந்திய அணியின் ஆசியக் கோப்பைக்கான தேர்வு குறித்து பேசியுள்ள லெஜெண்ட் கபில்தேவ் கூறுகையில் “ஒவ்வொரு வீரரும் சோதிக்கப்பட வேண்டும். உலகக் கோப்பை தொடர் மிக அருகில் இருக்கிறது. நீங்கள் இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து சோதிக்காமல் இருந்தால், இவர்கள் நேராக உலகக் கோப்பையில் சென்று காயம் அடைந்தால் என்ன செய்வது? இதனால் ஒட்டுமொத்த அணியும் பாதிக்கப்படும். இவர்கள் உலகக் கோப்பைக்கு முன்பாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என சில மணி நேரங்கள் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் காயம் இருக்கிறதா இல்லையா என்று தெரியும். மேலும் அவர்களுக்கு ரிதம் கிடைக்கும்.

- Advertisement -

உலகக் கோப்பையின் போது இந்த வீரர்கள் காயம் அடைந்தால். அது அணியின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டிய உலகக் கோப்பையை தவறவிட்ட வீரர்களுக்கு நியாயமானதாக இருக்காது. காயமடைந்து அணிக்கு திரும்பி இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அப்பொழுது காயம் குறித்து தெரிந்து விடும். காயம் ஏற்பட்டால் அவர்களை உடனே நீக்கிவிட்டு புதிய வீரர்களை சேர்த்துக் கொள்ளலாம். இங்கு திறமைக்கு பஞ்சம் கிடையாது.

உலகக் கோப்பைக்கு இந்திய அணியை உருவாக்குவதில் ஆசிய கோப்பை தொடர் ஒரு சிறந்த களமாக இருக்கும். இந்த வீரர்கள் ஆசிய கோப்பையில் சென்று தங்களை நிரூபிக்க வேண்டும். இதில் ஏதேனும் கேள்வி குறிகள் இருந்தால், இவர்கள் அணியில் இருக்க வேண்டியது இல்லை.

நீங்கள் காயமடைந்து திரும்பி வந்த உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்றால், அது அவர்களுக்கு மட்டுமல்ல தேர்வாளர்களுக்கும் நீங்கள் செய்யும் அநீதியாக அமையும். உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கிறது என்பதை அறிவேன். அதனால் நீங்கள் சிறந்த மற்றும் சரியான அணியை தேர்ந்தெடுக்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!