11 போட்டிகள்.. முடிவுக்கு வந்த இங்கிலாந்து சோகம்.. புரூக் வித்தியாச ஆட்டம்.. இலங்கை அணி சொந்த மண்ணில் தோல்வி

0
113
Root

இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இங்கிலாந்து பொறுமையாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது இங்கிலாந்து அணி வெள்ளை பந்து தொடர்களில் விளையாடுவதற்கு இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வென்று இருந்தது. இன்று இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

இலங்கை சுருண்டது

தற்போது இலங்கையில் பெரிய அணிகளுக்கு எதிராக வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாடினாலும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகின்றன. முதலில் பேட்டிங் செய்தால் மட்டுமே அதிக சாதகம் இருக்கும். ஆனால் இந்த முறை இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய வந்து கடுமையாக தடுமாறியது.

இலங்கை அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் அசலங்கா 45 ரன்கள், தனஞ்செயன் டி சில்வா 40 ரன்கள், பதும் நிசாங்கா 26 ரன்கள், குசால் மெண்டிஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இலங்கை அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஜெமி ஓவர்டன், ரேஹான் அகமத் மற்றும் ஜோ ரூட் மூவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

ரூட் புரூக் பொறுப்பான ஆட்டம்

இது தொடர்ந்து விளையாட வந்த இங்கிலாந்து அணிக்கு மேல் வரிசையில் பெரிய ரன்கள் கிடைக்கவில்லை. ஒருமுனையில் மிகச் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 90 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பென் டக்கெட் 52 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : U19 உலகக் கோப்பை.. 13 ஓவரில் நியூசியை பந்தாடிய சூரியவன்சி ஆயுஸ் மாத்ரே.. இந்தியா பிரம்மாண்ட வெற்றி

இதைத்தொடர்ந்து கேப்டன் ஹாரி புரூக் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பொறுமையாக விளையாடி 75 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இறுதியாக முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் ஆட்டம் இழக்காமல் 21 பந்தில் 33 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 46.2 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் வெளியில் தொடர்ந்து 11 போட்டிகளை இங்கிலாந்து அணி தோற்று இருந்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் வென்று அந்த சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

- Advertisement -