இந்திய கிரிக்கெட்

406 ரன் ரெக்கார்ட் சேஸ் பண்ணிட்டு.. இந்திய கேப்டன் கில் போட்ட பதிவு.. சமூக வலைதளத்தில் வைரல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 406 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த இலக்கை இந்திய அணி வெறும் 43.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸ் செய்து அசத்தியது. குறிப்பாக ரோஹித் சர்மா 101 ரன்கள் விளாசிய நிலையில், கேப்டன் சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 223 ரன்கள் குவித்து இந்தியாவின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

கில் 133 பந்துகளில் 26 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 223 ரன்கள் விளாசினார். இதன் மூலம் சேஸிங்கில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். மேலும், இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்த அதிகபட்ச இலக்காகவும் இந்த 406 ரன்கள் அமைந்தது.

இவ்வளவு பெரிய இலக்கை சேஸ் செய்த பிறகு கில் சமூக வலைதளத்தில் தனது இன்னிங்ஸ் புகைப்படங்களை பதிவிட்டு, “406? Cool.” என்று வெறும் இரண்டு வார்த்தைகளில் கேப்ஷன் கொடுத்துள்ளார். 406 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கையே சாதாரணமான ஒன்றை போல கில் குறிப்பிட்ட இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -
Published by

Recent Posts