ஜெய்ஸ்வால் நிச்சயமாக சேவாக் கிடையாது.. இந்த பையன் இந்த மாதிரி மேஜிக் வச்சிருக்கார் – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

0
40
Jaiswal

இந்திய டெஸ்ட் அணியின் இளம் தொடக்க ஆட்டக்கார ஜெய்ஸ்வால் வீரேந்தர் சேவாக் போன்றவர் கிடையாது இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 175 ரன்கள் எடுத்தார். அவசரப்பட்டு ரன் அவுட் ஆன காரணத்தினால் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் சேவாக் கிடையாது

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” மக்கள் ஜெய்ஸ்வாலை சேவாக்வுடன் அடிக்கடி ஒப்பிடுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர் அப்படியானவர் கிடையாது. சேவாக் அணுகுமுறை எளிமையானது. அவர் உள்ளே வந்து முதல் பந்தில் இருந்து அதிரடியாக விளையாடுவார். முடிந்தால் முதல் செஷன் முடிவில் சதம் அடிப்பதற்கு முயற்சி செய்வார். அவருடைய பேட்டிங் தத்துவம் இவ்வளவுதான்”

“அதே சமயம் ஜெய்ஸ்வாலை எடுத்துக் கொண்டால் அவர் தற்போது ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடுகிறார். எனவே தனக்கு கிடைக்கும் வாய்ப்பில் அவர் ஏதாவது செய்வதற்கு முயற்சி செய்கிறார். அவர் பொறுமையாக தொடங்கி படிப்படியாக முன்னேறி சென்று சிறப்பான முறையில் இன்னிங்சை கட்டமைத்து கொள்கிறார்”

- Advertisement -

ஜெய்ஸ்வால் மேஜிக்

“ஜெய்ஸ்வாலுக்கு எந்த ஈகோவும் அவசரமும் கிடையாது. மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக அவர் 40 ரன்கள் எடுத்தால் கூட திருப்தி அடைந்தவராக இருக்கிறார். அடுத்து செட் ஆகிவிட்டால் அதிரடியாக பவுண்டரிகளாக தொடர்ந்து அடிக்கிறார். இதனால் எதிரணிகள் திகைத்துப் போகின்றன. சொல்லப்போனால் இது ஒரு நாக் அவுட் தாக்குதல் முறை”

இதையும் படிங்க: WTC சைக்கிள்.. விராட் ரோஹித்தை தாண்டி கில் படைத்த பிரம்மாண்ட சாதனை.. கேப்டனாக புதிய மைல்கல்

“இந்த தாக்குதல் முறையை எப்படி சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அவருக்கு தெளிவாக தெரியும். அவர் அதிரடியாக விளையாடும் பொழுது கூட பொறுப்பற்றவராக இருப்பது கிடையாது. ஜேம்ஸ் ஆண்டர்சனை இறங்கி வந்து அடித்து விளாசிய அதே ஜெய்ஸ்வால் தற்போது இல்லை. அவர் இடது கை சுழல் பந்துவீச்சாளர்களை கூட பொறுமையாகவே விளையாடுகிறார். ஏனென்றால் அவர் சதம் அடிக்கவும் அதே சமயத்தில் பெரிய ரன்கள் எடுக்கவும் விரும்புகிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -