கில் 115 விராட் கோலி 166* இந்திய அணியின் அதிரடி ஆட்டம்! – மீண்டும் பொட்டலமானது இலங்கை அணி!

0
807

இலங்கை அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிக் கொண்டிருக்கிறது .. கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலேயே தொடரை இழந்துவிட்ட நிலையில் சம்பிரதாயமாக இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .

முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே போட்டியில் ஆதிக்கம் செலுத்தி ஆடியது . அதிரடியாக தொடங்கிய கில் மற்றும் ரோஹித் சர்மா இந்திய அணியின் ரன் ரேட் 6 குறையாமல் பார்த்துக் கொண்டனர். சிறப்பான ஒரு தொடக்கத்தை பெற்ற ரோகித் சர்மா இந்த ஸ்டார்ட்டையும் பெரிய ஸ்கோராக ஆக உயர்த்த முடியாமல் 42 ரண்களில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இரண்டாவது விக்கட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் கில் ஆகியோர் இந்திய அணியின் ஸ்கோரை பெரிய அளவிற்கு எடுத்துச் சென்றனர். இரண்டாவது விக்கெட் இவர்கள் இருவரும் 121 ரண்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய கில் ஒரு நாள் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்

பின்னர் அதிரடியாக ஆடி வேகமாக ரன் குவிக்க முயன்ற கில் 115 ரன்களில் ரஜிதா பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி அவுட் ஆனார் . அதன் பின் விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். அவர் ஒருபுறமும் நிதானமாக ஆட மறுமுலையில் அதிரடியாக ஆடிய விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் தனது 46 வது சதத்தை பதிவு செய்தார் . மேலும் இந்த போட்டியில் 60 ரன்கள் கடந்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்து வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் விராட் கோலி. இந்த சதத்தின் மூலம் விராட் கோலி இந்தியாவில் அடிக்கும் 21 வது சதம் இதுவாகும் . இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் இந்தியாவில் அடித்த 20 சதங்களுக்கான சாதனையை விராட் கோலி முறியடித்தார் .

இவரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி ஸ்கோர் முன்னூறு ரண்களை தாண்டி சென்றது . சிறப்பாக ஆடிய விராட் கோலி 150 ரன்கள் கடந்து நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறப்பான இன்னிசை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணியை 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 390 ரன்கள் எடுத்துள்ளது . விராட் கோலி 166 ரன்கள் உடன் நாட் அவுட் ஆக இருந்தார் . இதில் 8 சிக்ஸர்களும் 12 பவுண்டரிகள் அடங்கும். இலங்கை அணியின் பந்துவீச்சில் ரஜிதா இரண்டு விக்கெட்டுகளையும் லகிரு குமாரா இரண்டு விக்கெட்டுகளையும் கருணரத்தினே ஒரு விக்கட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

- Advertisement -