கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் அது ஐபிஎல் தொடர்ந்தான். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடர் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானத்தை கொடுத்திருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது.
இந்த சூழலில் ஐபிஎல் தொடரின் தரம் குறித்து பல வெளிநாட்டு வீரர்களும் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் இந்த தொடரில் விளையாடுகின்றவர்கள் பலரும் தாங்கள் பங்கேற்றதிலே, ஐபிஎல் தொடர் தான் மிகவும் கடினமாக இருந்தது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் தான் கடினம்:
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற ஆஸ்திரேலியா வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் பேசினார். அப்போது மைக்கேல் வாஹன், யார் சிறந்த கேப்டன் நீங்களா கம்மின்ஸா என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த கில்கிறிஸ்ட்,”உண்மையை சொல்ல வேண்டுமென்றால் உலகக் கோப்பையை வெல்வதைவிட ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வது தான் கடினம் என்று கூறினார்.” இதை கேட்டவுடன் மைக்கேல் வாஹன் சிரித்தார். “உடனே என்னை மன்னித்து விடுங்கள் பாண்டிங் நீங்கள் எட்டு உலக கோப்பையை அணியை தலைமை தாங்கி இருக்கிறீர்கள்” என்று கில்கிறிஸ்ட் பதிலளித்தார்.
ஐதராபாத் மக்களை கேவலப்படுத்தாதீங்க?
இதை தொடர்ந்து பேசிய மைக்கேல் வாகன், “நீங்கள் எந்த அணியை வழிநடத்தி கோப்பையை வென்றீர்கள் அதற்கு பெயர் டெக்கான் வாரியர்ஸ் தானே? ஒரு முறை கடைசி இடத்திற்கு முன்பும், மற்றொரு முறை சாம்பியன் பட்டத்தையும் உங்கள் தலைமையிலான அணி வென்றது என்று கூறினார்.”
இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. தோனி எனக்கு தந்தை, கடவுள் போன்றவர்.. முதல் சந்திப்பிலே நெகிழ்ச்சி வார்த்தை.. பதிரானா கருத்து
இதற்கு பதில் அளித்த கிலகிறிஸ்ட் “அடக்கடவுளே! எங்கள் அணியை பெயரை தப்பாக சொல்கிறீர்களே? நீங்கள் என்னை கேவலப்படுத்தவில்லை ஹைதராபாத் நகர மக்களை தான் நீங்கள் கேவலப்படுத்தி இருக்கிறீர்கள்” என்று கூறி பதிலளித்தார். இதை தொடர்ந்து பேசிய வாஹன், “இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் தோனியா ரோகித் சர்மாவா என்ற கேள்வி கேட்கப்பட்டதற்கு கில்கிறிஸ்ட் ஐபிஎல் கோப்பையையும் உலக கோப்பையையும் வென்றதால் தோனி தான் சார்ந்த கேப்டன் என்று பதில் அளித்தார்.






