இந்திய டெஸ்ட் அணி தொடர்ந்து உள்நாட்டில் தோல்விகளை சந்திப்பதால் பயிற்சியாளர் கம்பீர் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா? என்பது குறித்து செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இந்திய டெஸ்ட் அணி உள்நாட்டில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை கூட வெல்லாமல் முழுமையாக தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பயிற்சியாளர் கம்பீர் உடைய அணுகுமுறை காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.
வீரர்களுக்கு பாதுகாப்பில்லை
இந்திய தலைமை வீச்சாளர் கம்பீர் டி20 கிரிக்கெட்டை அணுகும் விதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டையும் அணுகுகின்ற காரணத்தினால், இந்திய டெஸ்ட் அணி கடுமையான பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது. அவருடைய அணித் தேர்வு ஒவ்வொரு முறையும் விமர்சனத்தை உண்டாக்கி கொண்டே இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிதிஷ்குமார் ரெட்டியை சேர்த்தது வரை தொடர்கிறது.
மேலும் வீரர்கள் எந்த இடத்தில் விளையாடப் போகிறார்கள் என்கின்ற உத்தரவாதமே இல்லாமல் இருக்கிறது. அடுத்து அவர்கள் தொடர்ந்து விளையாடுவார்களா என்பதற்கான உத்தரவாதமும் இருப்பதில்லை. இதன் காரணமாக வீரர்களுக்கு தெளிவும் பாதுகாப்பும் சுத்தமாக அணியில். இதன் காரணமாக வீரர்களின் செயல் திறன் பாதிக்கப்படுகிறது.
பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா?
இதுகுறித்து நேற்று பேசி இருந்த பயிற்சியாளர் கம்பீர் “இதுகுறித்து நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். எனக்கு இந்திய கிரிக்கெட்தான் மிகவும் முக்கியம். எனவே பிசிசிஐதான் என் குறித்து முடிவு எடுக்க வேண்டும். தற்போது இது மிகவும் அனுபவம் இல்லாத அணியாக இருக்கிறது. எனவே இந்த அணி வீரர்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க : இது ரொம்ப மட்டமான டீம்.. யாருக்குமே பொறுப்பு கொஞ்சம் கூட இல்ல.. ரிஷப் பண்ட் மோசம் – அஸ்வின் விமர்சனம்
கம்பீர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும் பொழுது “கம்பீர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. தற்போது இந்திய கிரிக்கெட் மாற்றத்தில் இருப்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். மேலும் அடுத்து டி20 உலகக் கோப்பை தொடர் இருக்கிறது, அவருக்கு 2027 ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தம் இருக்கிறது. எனவே அவரே தொடர்ந்து இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.






