இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜோஸ் ஹேசில்வுட் விலகியதில் ஏதோ மர்மம் இருப்பதாக இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடக்கிறது. இந்த போட்டி டிசம்பர் 6ம் தேதி அடிலெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
ஜோஸ் ஹேசில்வுட் சர்ச்சை பதில்
முதல் டெஸ்டின் மூன்றாவது நாள் முடிவில் பத்திரிகையாளர்களை ஜோஸ் ஹேசில்வுட் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம் பல கேள்விகளை முன் வைத்தார்கள். அதில் ஒருவர் அன்றைய நாளில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களின் அணுகுமுறை குறித்தான கேள்வியை முன் வைத்தார்.
இதற்கு பதில் அளித்த ஜோஸ் ஹேசில்வுட் கூறும்பொழுது “இது சம்பந்தமாக நீங்கள் எங்கள் பேட்ஸ்மேன்களிடம்தான் கேட்க வேண்டும். நான் அடுத்து பிசியோவிடம் சென்று ரெக்கவரியை பார்க்க வேண்டும். மேலும் மேற்கொண்டு என்ன செய்வது? என்பது பற்றி யோசிக்க வேண்டும்” என்று விரக்தி ஆக பதில் அளித்து இருந்தார். இதனால் அணிக்குள் பிளவு இருப்பதாக கருத்துக்கள் பரவின.
ஜோஸ் ஹேசில்வுட் விலகலில் மர்மம் இருக்கிறது
இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “ஆஸ்திரேலிய அணியில் வீதி இருப்பது தெளிவாக தெரிகிறது. அந்த அணியின் முன்னணி வீரர்களை டிராப் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். மேலும் சிலர் ஆஸ்திரேலியா அணியில் விரிசல் இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஜோஸ் ஹேசில்வுட் மூன்றாவது நாள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அளித்த பேட்டியினால் இந்த கருத்துக்கள் வருகிறது”
இதையும் படிங்க : எங்க ஸ்டோக்ஸ் பும்ராவுக்கு எதிரா இதை செய்யணும்.. அது ஆஸிக்கும் பிரச்சனையா மாறும் – மைக்கேல் வாகன் பேட்டி
“இந்த நிலையில் இப்போது சில நாட்கள் கழித்து ஹேசில்வுட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுகிறார். மேலும் முழு தொடரில் பங்கேற்பதும் தெளிவாக இல்லை. இது ஏதோ கொஞ்சம் விசித்திரமாக தெரிகிறது. அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தவறாக ஏதும் பேசவும் இல்லை. இது முழுக்க மர்மமாகவே இருக்கிறது. கடந்த காலங்களில் இது இந்திய அணியில் கூட நடந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.