சச்சின் சாதனையை ஜோ ரூட் உடைச்சா.. டெஸ்ட் கிரிக்கெட் எப்படி சிறப்பா மாறும்? – கவாஸ்கர் மைக்கேல் வாகனுக்கு பதிலடி

0
83
Gavaskar

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பதால் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட் எப்படி சிறப்பானதாக மாறிவிடும் என்று சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தற்போது கிரிக்கெட் உலகத்தில் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்திருக்கும் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் முறியடிப்பாரா என்பது மிகப்பெரிய பேச்சாக மாறி வந்திருக்கிறது. ஜோ ரூட் கடந்த ஐந்து வருடங்களில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பெரிய அளவில் ரன்கள் குவித்து வருகிறார்.

- Advertisement -

மைக்கேல் வாகன் சர்ச்சை பேச்சு

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த மைக்கேல் வாகன் தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் அதிகரின் குவித்திருக்கும் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடித்தால் அதை பிசிசிஐ விரும்பாது என்று பேசி இருந்தார். மேலும் அதை இன்னொரு வீரரை வைத்து பிசிசிஐ முறியடிக்க பார்க்கும் எனவே டெஸ்ட் கிரிக்கெட் சிறப்பாக மாறும் என்றும் கூறியிருந்தார்.

அதே சமயத்தில் வெளிநாட்டு சேர்ந்தவர்கள் ஜோ ரூட் சச்சின் சாதனையை முறியடித்தால் அது டெஸ்ட் கிரிக்கெட்டையே சிறப்பானதாக மாற்றிவிடும் என்பது போலான தோற்றத்தை உருவாக்கி பேசி வருகிறார்கள். இதுகுறித்து தற்போது இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் மிகக் கடுமையான முறையில் தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இனியும் விட முடியாது பதில் சொல்லுங்கள்

இதுகுறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “சச்சின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குறித்த சாதனையை வைத்திருப்பதால் தற்பொழுது என்ன தவறு நடந்து விட்டது? என்பதை எங்களிடம் கூறுங்கள். அதே சமயத்தில் ஒரு ஆங்கிலேயர் ஜோ ரூட் அந்த சாதனையை உடைத்து தன் வசப்படுத்திக் கொண்டால் திடீரென டெஸ்ட் கிரிக்கெட் எப்படி சிறப்பானதாக மாறிவிடும்? இது குறித்தும் தயவு செய்து எங்களுக்கு அறிவூட்டுங்கள்.

சில விசித்திரமான காரணங்களுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பிடிக்காது என்பது போல வெளிநாட்டில் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது ஒரு அபத்தமான கருத்து உருவாக்கம். ஒவ்வொரு சீசன் ஆரம்பிக்கும் பொழுது இந்தியா அரை டஜன் டெஸ்ட் போட்டிகள் விளையாடுகிறது.

இதையும் படிங்க : இந்தியா டெஸ்ட்.. பங்களாதேஷ் அணி அறிவிப்பு.. உள்நாட்டு டி20 பிளேயர் சேர்ப்பு.. முக்கிய வீரர் விலகல்.. கோப்பை குறி

இப்படி உள்நாட்டில் மட்டும் என்று இல்லாமல் வெளிநாட்டிலும் கூட ஒரு சீசன் ஆரம்பித்தால் இந்திய அணி இவ்வளவு டெஸ்ட் போட்டியை விளையாடுகிறது. ஐபிஎல் மிகப்பெரியது மேலும் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்காக பிசிசிஐ டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பவில்லை அளிக்கிறது என்று எப்படி கூற முடியும். இது வெளிநாட்டு ஊடகங்களால் தொடர்ந்து பரப்பப்பட்டு வரும் கதை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -