“பெரிய திறமைசாலி.. இந்த பையன் சீக்கிரத்துல எதையும் கத்துக்குவான்” – கவாஸ்கர் பேச்சு

0
666
Jaiswal

இந்திய கிரிக்கெட்டில் குறிப்பாக பேட்டிங் யூனிட்டில் இளம் வீரர்கள் வந்து நிரப்புவதற்கான நிறைய இடங்கள் இருக்கிறது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவர் மட்டுமே அனுபவ பேட்ஸ்மேன்களாக பேட்டிங் யூனிட்டில் இருக்கிறார்கள்.

மேலும் டி20 கிரிக்கெட்டில் இவர்கள் இருவரது தேவையுமே தற்காலத்தில் இல்லை என்பதாகத்தான் இந்திய கிரிக்கெட்டில் தெரிந்தது. ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடியிருக்க, திடீரென டி20 திட்டத்தில் மீண்டும் இவர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இன்னும் ஒன்று இரண்டு ஆண்டுகளில் ரோகித் சர்மா ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திலும் இருந்து முழுதாகவே இந்திய கிரிக்கெட்டில் வெளியேறி விடுவார். அடுத்த நான்கு வருடங்களுக்கு விராட் கோலி மட்டுமே நீடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

எனவே இதன் காரணமாக இந்திய கிரிக்கெட்டு நிர்வாகம் இந்திய கிரிக்கெட்டுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கான வீரர்களை தேடி வருகிறது. இதனால் நிறைய வீரர்களுக்கு அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது. எந்தவித தாமதமும் செய்யாமல் சாய் சுதர்சனையும் அணிக்குள் அழைத்தது நல்ல உதாரணம்.

தற்பொழுது நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் விராட் கோலி இல்லாத காரணத்தினால் ரஜத் பட்டிதார் மற்றும் கேஎல்.ராகுல் இல்லாததால் சர்ப்ராஸ் கான் என இரண்டு புதிய பேட்ஸ்மேன்கள் வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் இந்த டெஸ்ட் தொடரில் எல்லா இந்திய பேட்ஸ்மேன்களும் ஒரு வரிசையில் ஏமாற்றிக் கொண்டிருக்க, இளம் வீரர் இடதுகை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதத்தை இரட்டை சதமாக மாற்றி, இந்திய அணியின் வெற்றிக்கு பெரிய காரணமாக நின்று இருக்கிறார்.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் எழுதும்போது “விசாகப்பட்டினம் டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததின் மூலம், மேலும் தனக்கு சதம் அடிக்க கிடைத்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொண்டதன் மூலம், அவர் எதையும் சீக்கிரத்தில் கற்கும் திறமைசாலி என நிரூபித்திருக்கிறார்.

இதையும் படிங்க : “டிராவிட்க்கு புரிஞ்சிருக்கும்.. இங்கிலாந்து அணிக்கு பெரியதாய் கொடுக்க போகிறார்கள்” – நாசர் ஹுசைன் பேச்சு

அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு பெரிய சதம் அடித்து இன்னிங்சை கையில் வைத்திருக்க ஒரு பேட்ஸ்மேன் தேவைப்பட்டார். ஏனென்றால் மற்ற பேட்ஸ்மேன்கள் முதல் போட்டியில் செய்தது போலவே, இரண்டாவது போட்டியிலும் செய்து தங்கள் விக்கெட்டுகளை தாரை வார்த்தார்கள்” எனக் கூறியிருக்கிறார்.