தம்பிகளா அமெரிக்காவா இருக்க தப்பிச்சீங்க.. உங்களுக்கு அந்த டீம்கள் காத்துக்கிட்டு இருக்கு – சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை

0
8
Gavaskar

நேற்று இந்திய அணி அமெரிக்க அணிக்கு எதிராக மிக மோசமான முறையில் பேட்டிங் செய்தது. சூரியகுமார் மட்டுமே பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். இதுகுறித்து சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய டி20 அணி தற்பொழுது முதல் பந்தில் இருந்து அதிரடியாக விளையாடுவதை அணுகுமுறையாக, திட்டமாக வைத்திருக்கிறது. ஆனால் அதை கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டிய தேவையை நேற்று அமெரிக்க அணிக்கு எதிரான போட்டி உணர்த்தி உள்ளது.

- Advertisement -

இந்திய அணி என்ன செய்திருக்கலாம்?

தற்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை 8 வரையில் இருக்கிறது. இந்த நிலையில் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முயற்சி செய்யலாம். ஒருவேளை அவர்கள் சீக்கிரத்தில் ஆட்டம் இழக்கும் பொழுது அடுத்து வரக்கூடிய நான்கு பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்து இறுதியில் அதிரடியாக விளையாடலாம்.

நேற்று சிவம் துபே நான்காவது விக்கெட்டாக வெளியேறினார். ஆனால் அதற்குப் பிறகு வந்த ரிங்கு சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாடவில்லை. இருவருமே அதிரடியாக விளையாட முயற்சி செய்து விக்கெட்டை இழந்து இந்திய அணிக்கு பெரிய நெருக்கடியை உண்டாக்கினார்கள்.

- Advertisement -

உலகக் கோப்பை வேற மாதிரி

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” நீங்கள் அதிரடியாக விளையாட முயற்சி செய்து உங்கள் எட்டு பேட்ஸ்மேன்களில் நான்கு பேர் பவர் பிளேவில் வெளியேறினால், நீங்கள் சிக்கலில் சிக்க போகிறீர்கள் என்று அர்த்தம். நல்ல திறமையும் டி20 உலகக் கோப்பைகளில் விளையாடிய அனுபவமும் கொண்ட பெரிய அணிகளிடம் நீங்கள் தப்பிக்க முடியாது”

இதையும் படிங்க : கம்பீர் உங்க திட்டத்தை மாத்திக்கோங்க.. ரிங்கு சிங் ஹர்திக் பாண்டியா செஞ்சதை ஏத்துக்க முடியாது – ஹர்பஜன் சிங் விமர்சனம்

“நீங்கள் பவர் பிளேவில் முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்து உங்களை சிக்கலில் வைத்துக் கொள்ள விரும்ப மாட்டீர்கள். உலகக் கோப்பை என்று வரும் பொழுது பெரிய அணிகள் அனைத்துமே தங்களின் செயல் திறனை சிறப்பான நிலைக்கு உயர்த்துகின்றன. ஏனென்றால் இவை தினமும் வரக்கூடிய விஷயம் இல்லை. எனவே பெரிய அணிகள் உங்களை உலககோப்பையில் சும்மா விடாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -