இந்திய வீரர்களுக்கு ஐபிஎல் இருக்கு.. அவங்க அணுகுமுறை மோசமா இப்படித்தான் இருக்கும் – கவாஸ்கர் விமர்சனம்

0
49
Gavaskar

இந்திய அணி வீரர்களுக்கு ஐபிஎல் இருப்பதால் அவர்கள் எந்த தோல்வி பற்றியும் கவலைப்படுவதில்லை என சுனில் கவாஸ்கர் அதிரடியான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிக மோசமான முறையில் பேட்டிங் அணுகு முறையை அமைத்து பத்து விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது. இதன் காரணமாக சுனில் கவாஸ்கர் ரிஷப் பண்ட் மூலமாக இந்திய வீரர்கள் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

புஜாரா வைத்த விமர்சனம்

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் 15 முதல் 20 ஓவர்களுக்குள்ளாகவே அதிக ஷாட்கள் விளையாட சென்றார்கள் என்றும், இதன் காரணமாகவே இந்திய அணி விரைவில் விக்கெட்டுகளை இழந்தது என்றும் விமர்சனத்தை முன் வைத்திருந்தார். பொறுமையாக விளையாடும் கேஎல்.ராகுல் இரண்டாவது இன்னிங்ஸில் தேவையற்ற ஷாட் விளையாடி ஆட்டம் இழந்தார்.

மேலும் களத்திற்கு வந்த ரிஷப் பண்ட் முதல் பந்தையே இறங்கி வந்து அடித்தார். மேலும் ரிவர்ஸ் ஸ்கூப் போன்ற அபாயகரமான ஷாட்டை விளையாடினார். அவரது ஆட்ட அணுகுமுறை முற்றிலும் டி20 கிரிக்கெட் அணுகுமுறை போல இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் ஆடுகளம் பந்து வீச்சுக்கும் மிக சாதகமாக இருந்தது.

- Advertisement -

இவர்களுக்கு ஐபிஎல் இருக்கிறது

இதுகுறித்து விமர்சனத்தை முன் வைத்திருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “ரிஷப் பண்ட் விளையாடிய முறை, மிகவும் பொழுதுபோக்கான முறை இதுகுறித்து எந்த கேள்வியும் சந்தேகமும் கிடையாது. ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தை மறக்க கூடாது. பழைய கால கிரிக்கெட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாற்று கிடையாது. எனவே நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வி அடைந்தால் ரஞ்சி டிராபி விளையாட செல்ல வேண்டும். இல்லையென்றால் ஏதாவது கிளப் அணிக்கு விளையாட செல்ல வேண்டும்”

இதையும் படிங்க : WTC புள்ளி பட்டியல்.. முதல் முறை மோசமாக சரிந்த இந்திய அணி.. ஆஸி தென் ஆப்பிரிக்கா.. மாறிய நிலவரம்

“ஆனால் இந்திய வீரர்களுக்கு ஐபிஎல் போன்ற ஒரு பெரிய வசதியான லீக் இருக்கிறது. இங்கு பெரிய கோடிகளில் பணம் கிடைக்கிறது. நீங்கள் இப்படி எல்லாம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உரிய முறையில் விளையாடாமல் அணியில் இருந்து நீக்கப்பட்டாலும் கூட, உங்களை காப்பாற்ற ஐபிஎல் இருக்கிறது. எனவே இவர்களுக்கு எந்த கவலையும் இருப்பதில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -