நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல்முறையாக மோசமான இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இந்திய அணியை தாண்டி முன்னிலை பெற்று இருக்கின்றன.
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்திய அணி தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் இருந்து ஆதிக்கம் செலுத்தி கொண்டு வந்தது. இந்த நிலையில் முதல் முறையாக இந்த இரண்டு இடங்களை விட்டு இந்திய அணி கீழே இறங்கி இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக மாற்றிய நியூசிலாந்து
இந்தியா வந்து மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய நியூசிலாந்து அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது. நியூசிலாந்து அணியின் இந்த அதிரடி கட்சியின் காரணமாக இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு மிகவும் கடினமாக மாறிவிட்டது.
அதே சமயத்தில் தற்பொழுது தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை தோற்று தொடரையும் இழந்ததோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் நியூசிலாந்து இழந்துவிட்டது. தற்போது நியூசிலாந்தும் பைனல் வாய்ப்பை உறுதி செய்யாமல் இந்திய அணியின் பைனல் வாய்ப்பையும் மோசமாக்கிவிட்டு இருக்கிறது.
அதிரடியாக மாறிய நிலவரம்
இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை தோற்றதின் காரணமாக புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சரிந்து இருக்கிறது. மூன்றாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இரண்டாவது இடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்திய அணி மேற்கொண்டு மூன்று போட்டிகளில் மூன்றையும் வெல்ல வேண்டும். ஆஸ்திரேலியா அணி எஞ்சி இருக்கும் தனது 5 போட்டிகளில் மூன்று போட்டிகளை வெல்ல வேண்டும். தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகளில் இரண்டை வெல்ல வேண்டும். இலங்கை மீதமிருக்கும் மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டும். இந்த நான்கு அணிகளுக்கு மட்டுமே தற்பொழுது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்பு இருக்கிறது.
இதையும் படிங்க : இவர் என் டீம்ல இருக்கிறது என்னோட பாக்கியம்.. இந்திய அணிக்கு இதைத்தான் செய்தோம் – கம்மின்ஸ் பேட்டி
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் :
ஆஸ்திரேலியா – 60.71
தென் ஆப்பிரிக்கா – 59.26
இந்தியா – 57.29
இலங்கை – 50.00
இங்கிலாந்து – 45.24
நியூசிலாந்து – 44.23
பாகிஸ்தான் – 33.33
பங்களாதேஷ் – 31.25
வெஸ்ட் இண்டீஸ் – 24.24






