தோனி மற்றும் கம்பீர் குறித்து நக்கலடித்து பேசிய அனைவருக்கும் சாட்டையடி கொடுத்த கவுதம் கம்பீர்

0
330
Gautham Gambhir and MS Dhoni

நேற்று நடந்து முடிந்து ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியின் ஓபனிங் வீரர் உத்தப்பா 27 பந்துகளில் 50 ரன்கள் குவிக்க பின்னர் வந்த மொயின் அலி 22 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார்.

இவர்கள் இருவரை தொடர்ந்து ஷிவம் டுபே 30 பந்துகளில் 49 ரன்கள் குவிக்க, அவருடன் இணைந்து விளையாடிய ராயுடு 20 பந்துகளில் 27 ரன்கள் குவிக்க சென்னை அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.இறுதியில் 9 பந்துகளில் 16 ரன்கள் கேப்டன் ரவீந்திர ஜடேஜா அடிக்க, மறுபக்கம் மகேந்திர சிங் தோனி 6 பந்துகளில் 16 ரன்கள் அடிக்க 20 ஓவர் முடிவில் சென்னை அணி 210 ரன்கள் குவித்தது.

- Advertisement -
சென்னை அணிக்கு 2வது தோல்வியை பரிசளித்த லக்னோ அணி

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் அவருடைய பாட்னர் டீ காக் ஆரம்பத்தில் இருந்து அதிரடியாக விளையாடினார். முதல் விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் இணைந்து 99 ரன்கள் சேர்த்தனர். கேஎல் ராகுல் 26 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். டீ காக் 45 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் களமிறங்கிய எவின் லீவிஸ் வெற்றியை சென்னை அணியின் கைகளிலிருந்து பறித்துக் கொண்டார். கடைசி 2 ஓவர்களில் 44 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தபொழுது ஷிவம் டுபே 19-வது ஓவரை வீச வந்தார். 19வது ஓவரில் இளம் வீரர் ஆயுஷ் பதோனி முதல் பந்தையே சிக்சராக அடித்து ஸ்ட்ரைக்கை பின் லீவிஸ் இடம் கொடுத்தார். மீதமிருந்த 4 பந்துகளில் லீவிஸ் 16 ரன்கள் குவிக்க லக்னோ அணியின் வெற்றி உறுதியானது. இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

23 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடித்து 55* ரன்னுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த லீவிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -
கம்பீர் மற்றும் தோனி இணைந்து நின்றவாறு வெளியான புகைப்படம்

இந்திய ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே மகேந்திர சிங் தோனிக்கும் கௌதம் கம்பீருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாகவும் அதை வெளிப்படையாகவே இவர்களிருவரும் சூசகமாக தெரிவித்து வருகின்றனர் என்றும் கட்டுக்கதைகள் வலம் வந்திருக்கின்றன.அந்த கட்டுக் கதைகள் அனைத்துமே நேற்று ஒரே ஒரு புகைப்படத்தில் பொய்யானது.

லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் என்று நம் அனைவருக்கும் தெரியும். நேற்று சென்னை அணியை லக்னோ அணி வீழ்த்தியவுடன் இவர்கள் இருவரும் முகம் பார்த்து பேச மாட்டார்கள் என்று நகைச்சுவையாக சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.

ஆனால் போட்டி முடிந்த பின்னர் மகேந்திர சிங் தோனி மற்றும் கௌதம் கம்பீர் இருவரும் இணைந்து போட்டி குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் அதிகமாக பேசியிருக்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நின்று பேசிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இவர்கள் இருவர் குறித்து நக்கல் அடித்து பேசி வந்த அனைவருக்கும், இந்த ஒற்றை புகைப்படம் சாட்டையடி கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்