நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே என டி20 உலக கோப்பை சூப்பர் 8 போட்டியில் சஞ்சு சாம்சனின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி அரை இறுதியை எட்டி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 50 பந்துகளை எதிர்கொண்ட அவர் 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.
இதில் 12 பவுண்டரி மற்றும் சிக்சர் அடங்கும். இந்த ஆட்டத்தின் மூலமாக தன் மீதான விமர்சனங்களுக்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும் இறுதிக்கட்டத்தில் சிவம் தூபே அடித்த இரண்டு பவுண்டரிகள் ஆட்டத்தை வெல்வதற்கு மிக முக்கிய பங்கு வகித்தது. இந்த நிலையில் அதைப் பற்றி குறிப்பிட்டு பேசியிருக்கும் கௌதம் கம்பீர் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது “நீங்கள் ஒவ்வொரு பங்களிப்பை பற்றி பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது. சில வருடங்களாக நாம் சில பங்களிப்புகளை மட்டுமே பேசுகிறோம். முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் இது குழு விளையாட்டு இது எப்போதுமே ஒன்றாக இருக்கும். எனக்கு சிவம் தூபே அடித்த இரண்டு பவுண்டரிகளும் சஞ்சு அடித்த 97 ரன்கள் போலவே முக்கியம். ஏனென்றால் அந்த இரண்டு பவுண்டரிகள் அடித்திருக்காவிட்டால் நீங்கள் 97 ரன்கள் குறித்து பேசி இருக்க மாட்டீர்கள்.
சஞ்சு சாம்சன் ஒரு சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். அதேபோல ஒரு சில சிறிய இன்னிங்ஸ்கள் ஆட்டத்தை வெல்வதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன” என்று கம்பீர் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த போட்டியின் மூலமாக அறை இறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் இந்திய அணி அடுத்ததாக வருகிற வியாழக்கிழமை இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.