இந்திய கிரிக்கெட் அணி நாளை நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றும்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் சுக்மான்கில் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவது குறித்து சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.
ரோகித் சர்மா ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்களாக தற்போது வலம் வரும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இறுதிப் போட்டியை வென்று கொடுத்துவிட்டு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
இந்த சூழ்நிலையில் தற்போது ரோகித் சர்மாவிற்கு 37 வயதாவதால் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்தும் விரைவில் ஓய்வு பெறுவார் என்ற தகவல்கள் வெளி வருகிறது. எனவே இறுதிப் போட்டி முடிந்ததும் ரோகித் சர்மா தனது ஓய்வு முடிவை தெரிவிப்பார் என்ற பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் இது குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மான் கில் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவது குறித்து எதுவும் பேசவில்லை எனவும், ஒருவேளை அவர் இறுதிப்போட்டி முடிவடைந்த பிறகு இதற்கான அறிவிப்பை வெளியிடலாம் என சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
இந்திய துணை கேப்டன் பேட்டி
இது குறித்து கில் விரிவாக கூறும்போது “நாங்கள் இன்னும் அது குறித்த விவாதிக்கவில்லை. எங்களது உரையாடல்கள் அனைத்துமே போட்டியை வெல்வது குறித்து மட்டுமே இப்போதைக்கு இருக்கிறது. எங்கள் முழு கவனமும் இப்போது போட்டியை எப்படி அணுக வேண்டும், வெல்ல வேண்டும் என்பது குறித்து மட்டுமே இருக்கும் நிலையில், ஓய்வு பெறுவது குறித்து ரோஹித் சர்மா அணி இடமோ என்னிடமோ இன்னும் பெரிதாக விவாதிக்கவில்லை. ரோஹித் சர்மா இப்போது இறுதிப் போட்டியை ஜெயிப்பது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க:2008லயே 80 ரன் எடுக்கணும்னு எங்க சிஎஸ்கே வீரர் சொன்னது.. மறக்கவே முடியாது.. அசால்டா சொன்னாரு – சுரேஷ் ரெய்னா ஆச்சரியம்
முதலில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்வதில் அவர கவனம் செலுத்துவார், அதற்குப் பிறகு ஓய்வு பெறுவது குறித்து அதில் கவனம் செலுத்துவார் என்று நினைக்கிறேன். ஆனால் அவரிடம் இருந்து நான் யாரிடமும் இதை கேள்விப்பட்டதில்லை” என கில் பேசி இருக்கிறார். எனவே இதன் மூலமாக ரோஹித் சர்மா இந்த தொடர் முடிவடைந்த பிறகு அறிவிப்பாரா? அல்லது 2027-ம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையில் விளையாடிவிட்டு அதற்குப் பிறகு அறிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்