நியூசிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பரபரப்பான முதல் ஒருநாள் போட்டியில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி வெள்ளை பந்து தொடர்களில் விளையாடுவதற்கு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
டேரில் மிட்சல் அபாரம்
இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களில் ரச்சின் ரவீந்தரா 15 பந்துகளில் நான்கு ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். ஆனால் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் கான்வே 58 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து மைக்கேல் பிரேஸ்வெல் 52 பந்துகளில் 35 ரன், சகாரி போல்க்ஸ் 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்கள். ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய டேரில் மிட்சல் 118 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 119 ரன்கள் எடுத்தார். இறுதியில் 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் வந்து வீச்சில் ஜெய்டன் சீல்ஸ் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
பரபரப்பான போட்டி
இதைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அலிக் ஆதனஸ் 27, கேசி கார்தி 32, சாய் ஹோப் 37, ரூதர்போர்டு 55 ரன் எடுத்தார்கள். இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் 45 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. மேலும் கடைசி ஐந்து ஓவர்களில் வெற்றிக்கு ஐந்து விக்கெட் கைவசம் இருக்க 61 ரன்கள் தேவைப்பட்டது.
இதையும் படிங்க : 124 ஜெயிக்கிறதுக்கான ஸ்கோரே கிடையாது.. ஆனா நாங்க வின் பண்ண முக்கிய காரணம் இதுதான் – டெம்பா பவுமா கருத்து
இதற்கடுத்து ஜஸ்டின் கிரீவ்ஸ் 24 பந்தில் 38 ரன்கள், ரோமாரியோ ஷெப்பர்ட் 19 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் வெற்றிக்காக கடுமையாக போராடினார்கள். ஆனாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியாக ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் பரிதாபமாக பரபரப்பான போட்டியில் தோல்வியடைந்தது.






