இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் கனவை கோட்டை விட்டது. இருப்பினும் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரராக கம்பீர் இருந்த போதே இந்திய அணி வீரர்களுக்கு ஒரு முக்கிய அறிவுரையை வழங்கி இருக்கிறார்.
அதிரடியாக ஆடும் ரோஹித்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி குறைவான ரன்கள் அடித்தது தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் என்று கருத்துக்கள் வெளிவந்த நிலையில் அதற்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது ஆட்ட முறையை முற்றிலும் மாற்றினார்.
தனது சொந்த ரெக்கார்டுகளை ஒதுக்கி வைத்து விட்டு அணியின் நலனுக்காக அதிரடியான ஆட்டமுறையை கடைப்பிடித்தார். இது கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையில் நல்ல பலன் அளித்தது. ஆனால் எதிர்பாராத விதமாக இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது. இருந்தாலும் தனது ஆட்ட முறையை மாற்றிக் கொள்ளாத இந்திய அணி தற்போது நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் அதே ஆட்ட முறையை பின்பற்றி வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கௌதம் கம்பீர் ஒரு நாள் உலக கோப்பைக்கு முன்பாகவே இந்திய அணி வீரர்கள் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடாமல் அணியின் நலனுக்காக விளையாட வேண்டும் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கம்பீர் கூறிய அறிவுரை
இதுகுறித்து அவர் கூறும் போது “நீங்கள் ரன்கள் அடிக்கும் மனநிலையில் செயல்பட்டால் உங்கள் அணி வெற்றி பெற வேண்டிய வகையில் அமைய வேண்டும். உங்கள் சாதனைகள் சதம் அல்லது அரை சதம் அடிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை. நீங்கள் 40 ரன்கள் அல்லது 20 ரன்கள் கூட குவித்தாலும் உங்கள் அணியின் 170 முதல் 180 ரன்கள் வரை அடிப்பதற்கு போதுமான உதவி செய்ய வேண்டும். நீங்கள் சேஸ் செய்து விளையாடுகிறீர்கள் என்றால் உங்கள் மிடில் ஆர்டர் அழுத்தத்தை குறைக்கும் வகையில் விளையாட வேண்டும்.
இதையும் படிங்க:ரொம்ப தப்பா இருக்கு.. உங்கள மாதிரி யாருமே இத செய்ய மாட்டாங்க ரோஹித் – சஞ்சய் மஞ்சுரேக்கர் விமர்சனம்
உங்கள் தனிப்பட்ட சாதனைகளை வீட்டில் வைத்துவிட்டு அணியின் நலனுக்காக விளையாடுவதே மிகவும் முக்கியம். நீங்கள் 200 ரன்கள் அடித்தாலும் அது அணி வெற்றி பெற்றால் மட்டுமே கொண்டாடப்படும். நீங்கள் 500 ரன்கள் அடித்தாலும் அணி தோல்வி அடைந்தால் அதில் எந்தவித பயனும் இல்லை” என்று உணர வேண்டும் என்று கூறி இருக்கிறார்.