இந்திய கிரிக்கெட்

அகர்கர் பாய் வரலாறு உங்கள் மீது இரக்கம் காட்டும்.. இந்த விஷயங்கள் உங்கள் நேர்மைக்கு சாட்சி – கம்பீர் உருக்கம்

​இந்திய கிரிக்கெட் அணியின் சீஃப் செலக்டராக இருந்த அஜித் அகர்கரின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவரைப் பாராட்டி இந்திய அணியின் ஹெட் கோச் கௌதம் கம்பீர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

​இந்திய அணி மூன்று ஐசிசி டிராபிகளை வெல்வதற்கும், நான்கு ஐசிசி ஃபைனல்களுக்குச் செல்வதற்கும் அகர்கரின் தொலைநோக்குப் பார்வையும், அணியே முக்கியம் என்ற மனப்பான்மையும்தான் மிக முக்கியமான காரணமாக அமைந்தது.

அவரது பதவிக் காலத்தில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் ஃபார்மட்டில் இருந்து ஓய்வு பெற்றபோதும், அணியின் வெற்றியைத் தக்கவைக்கத் தேவையான மிகக் கடுமையான முடிவுகளை அவரும் நிர்வாகமும் துணிச்சலாக எடுத்தனர்.

​லக்னோவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20ஐ போட்டி முடிந்த பிறகு, அகர்கரின் பங்களிப்பை நினைவுகூர்ந்து கௌதம் கம்பீர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

​இதுகுறித்து கௌதம் கம்பீர் பேசும்போது “அன்புள்ள அஜித் பாய், உங்களுடன் இணைந்து பணியாற்றியதை பெருமையாகக் கருதுகிறேன்; நாம் வென்ற அந்த 3 ஐசிசி டிராபிகளே எப்போதும் அணிதான் முதன்மை என்ற உங்கள் உறுதியான கொள்கைக்கு மிகச்சிறந்த சான்றாகும்; வரலாறு உங்களுக்கு மிகவும் இரக்கமுள்ளதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்; உங்களுடைய அனைத்து பங்களிப்புகளுக்கும் மிக்க நன்றி, உங்களின் எதிர்காலப் பயணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறி இருக்கிறார்”.

- Advertisement -
Published by

Recent Posts