தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கௌதம் கம்பீர் தன்னுடன் இணைந்து விளையாடிய வீரர்களை வைத்து ஆல் டைம் ஐபிஎல் பிளேயிங் லெவனை தேர்வு செய்திருக்கிறார்.
கம்பீர் தேர்ந்தெடுத்து இருக்கும் இந்த பிளேயிங் லெவனின் அவருடன் ஐபிஎல் தொடரில் இணைந்து விளையாடிய வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். இதில் கம்பீர சில ஆச்சரியமான பெயர்களையும் தேர்வு செய்திருக்கிறார். அதேபோல சில முக்கிய வீரர்களின் பெயரை தேர்வு செய்யவில்லை.
சேவாக் ஏபிடி கிடையாது
இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் சேர்ந்து விளையாடிய அப்போதைய கேப்டன் வீரேந்திர சேவாக் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் ஏபி.டிவில்லியர்ஸ் ஆகியோர் பெயர்களை கம்பீர் சேர்க்காதது பெரிய ஆச்சரியமாக அமைந்திருக்கிறது. இந்த இருவரும் டி20 கிரிக்கெட்டில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கம்பீரின் ஆச்சரியம் அளிக்கும் முடிவுகள் தொடர்கிறது.
இந்த அணியில் கவுதம் கம்பீர் தன்னுடன் சேர்த்து ராபின் உத்தப்பாவை தொடக்க ஆட்டக்காரராக வைத்திருக்கிறார். அதே சமயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பேட்டிங் வரிசையில் சூரிய குமாருக்கு தான் கேப்டனாக இருந்த பொழுது மேல் வரிசையில் இடம் தர முடியாமல் இருந்ததற்கு, இந்த முறை மூன்றாவது இடம் தந்து சரி செய்து இருக்கிறார். நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் காலிஸ் மற்றும் யூசுப் பதான் இருவரும் வருகிறார்கள்.
பவுலிங் பயிற்சியாளரை விடாத கம்பீர்
இதைத் தொடர்ந்து மூன்று ஆல் ரவுண்டர்களாக ஆண்ட்ரே ரசல், ஷாகிப் அல் ஹசன் சுனில் நரைன் ஆகியோரை தேர்வு செய்திருக்கிறார். இத்தோடு இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களாக பியூஸ் சாவ்லா மற்றும் டேனியல் வெட்டேரியை கொண்டு வந்திருக்கிறார். மேலும் 11வது வீரராக தற்பொழுது இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் மோர்னே மோர்கலை வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க : பங்களாதேஷ் டெஸ்ட்.. இன்னும் 6 விக்கெட்.. சென்னையில் ஜடேஜா தனி சாதனைக்கு வாய்ப்பு.. முதல் வீரராக பெருமை
கம்பீர் தேர்ந்தெடுத்து இருக்கும் ஆல் டைம் ஐபிஎல் பிளேயிங் லெவன் :
கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா, சூர்யகுமார் யாதவ், ஜாக் காலிஸ், யூசுப் பதான், ஆண்ட்ரே ரசல், ஷகிப்-அல் ஹசன், சுனில் நரைன், பியூஷ் சாவ்லா, டேனியல் வெட்டோரி மற்றும் மோர்னே மோர்கல்.