சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் திடீர் ஓய்வு பெற்றது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக திடீரென இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியும் ஒரு வாரம் கழித்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அவங்க இல்லாம கஷ்டம்தான்
இது குறித்து பேசி இருக்கும் கவுதம் கம்பீர் கூறும் பொழுது ” ஆமாம் நாம் இரண்டு மூத்த வீரர்கள் இல்லாமல் இனி இருக்க வேண்டும். சில சமயங்களில் வேறு சிலர் கைகளை உயர்த்தி நான் அந்த இடத்திற்கு இருக்கிறேன் என்று சொல்வதற்கான வாய்ப்பாக இதை நாம் பார்க்க வேண்டும். இது நிச்சயமாக கடினமாக இருக்கும். ஆனால் இந்த கேள்வியை என்னிடம் முன்கூட்டியே கேட்கப்பட்டு விட்டதால், வேறு யாராவது கைகளை உயர்த்துவதற்கு தற்பொழுது தயாராகவே இருப்பார்கள்”
“சாம்பியன்ஸ் டிராபி கூட இப்படித்தான். பும்ரா இல்லாத பொழுது நான் இதையே சொன்னேன். யாராவது தவறவிட்டால், நாட்டிற்காக சிறப்பாக ஏதாவது செய்ய தயாராக இருக்கும் வேறு ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். இப்படி சிறப்பாக செய்ய வெளியில் யாராவது காத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்”
எங்களுக்கு உரிமை கிடையாது
“நீங்கள் எப்போது ஆட்டத்தை துவங்குகிறீர்கள் நீங்கள் எப்போது ஓய்வு பெற முடிவு செய்கிறீர்கள் என்பது, எப்போதும் உங்களுடைய தனிப்பட்ட முடிவாகத்தான் இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். இதில் தலையிடுவதற்கு யாருக்குமே உரிமை கிடையாது”
இதையும் படிங்க : உறுதியா சொல்றேன்.. அந்த இந்திய டீம்ல என் பேர் இருக்கும்.. ஆனா என் திட்டமே வேற – சாய் சுதர்சன் பேட்டி
“பயிற்சியாளராக இருந்தாலும், தேர்வாளராக இருந்தாலும், மேலும் வேறு யாராக இருந்தாலும் எப்போது விளையாட வேண்டும் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது குறித்து சொல்ல எந்த உரிமையும் இல்லை. எனவே இது ஒருவரின் உள்ளிருந்து வரக்கூடிய தனிப்பட்ட முடிவு” என்று கூறியிருக்கிறார்.