சற்றுமுன் பிசிசிஐ இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீரை அறிவித்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மெண்டல் பொறுப்பில் சாம்பியன் பட்டத்தை வென்ற கம்பீர் உடனே இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்த நிலையில் இதுகுறித்து உறுதியான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தற்பொழுது 42 வயதாகும் கவுதம் கம்பீர் முதல் முறையாக இந்திய அணிக்கு முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் 2003 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக அறிமுகமான. அடுத்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற கவுதம் கம்பீர், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் என இரண்டிலும் சேர்த்து இந்திய அணிக்கு மொத்தம் 20 சதங்கள் அடித்திருக்கிறார்.
இத்துடன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து இரண்டு முறை கோப்பையை வென்றிருக்கிறார். மேலும் ஒரு முறை மென்டராக இருந்து அணியை முன்னின்று வெளியில் வழி நடத்தி இந்த ஆண்டு மீண்டும் கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்.
தற்பொழுது இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்கும் கவுதம் கம்பீர் இது குறித்து தன்னுடைய அறிக்கையில் கூறும் பொழுது “இந்தியா என்னுடைய அடையாளமாகும். மேலும் என்னுடைய நாட்டிற்கு நான் சேவை செய்வது எனக்கு மிகப் பெரிய பாக்கியம் ஆகும். வேறு தொப்பி அணிந்திருந்தாலும் தற்பொழுது மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இதையும் படிங்க : இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கம்பீர்.. அறிவித்தது பிசிசிஐ.. ஜெய் ஷா ஸ்பெஷல் மெசேஜ்
அதே சமயத்தில் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைக்க நினைக்கிறேன். 1.4 பில்லியன் மக்களின் கனவுகளை நிறைவேற்ற நீல நிற உடையை அணிந்திருப்பவர்கள் நனவாக்க என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன்” என்று கூறியிருக்கிறார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மா தான் கேப்டன் என்பதும் உறுதியாக இருக்கிறது. மொத்தமாக மூன்றரை வருடம் இந்த பொறுப்பில் கம்பீர் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது!






