இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கம்பீர்.. அறிவித்தது பிசிசிஐ.. ஜெய் ஷா ஸ்பெஷல் மெசேஜ்

0
485
Gambhir

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தீவிரமாக புதிய பயிற்சியாளரை தேடி வந்த பிசிசிஐ தற்போது கவுதம் கம்பீர் பெயரை அறிவித்திருக்கிறது.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றதோடு, முக்கிய போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி அழுத்தத்தை வென்ற பெரிய வீரராக இருப்பவர்.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தி இரண்டு முறை கோப்பையை வென்றவர். அவருடைய சர்வதேச மற்றும் ஐபிஎல் தொடர் கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் வெற்றிகரமாக இருந்தது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு மென்டராக இருந்து இரண்டு முறை பிளே ஆப் சுற்றுக்கு தொடர்ந்து அந்த அணி சென்றது. இதற்கடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மென்டராக வந்து இந்த வருடம் அந்த அணி சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

- Advertisement -

வீரர்களை ஒருங்கிணைத்து சரியான ரோலை கொடுத்து மிகச் சிறப்பான முறையில் வழிநடத்தும் பண்பு கொண்ட கவுதம் கம்பீரை புதிய தலைமை பயிற்சியாளராக பிசிசிஐ இந்திய அணிக்கு அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய வாழ்த்தில் ஜெய் ஷா கூறும் பொழுது “இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீரை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தற்கால கிரிக்கெட் மிகவும் மாறி இருக்கிறது. மேலும் அவர் இதையெல்லாம் மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறார். குறிப்பாக வாழ்நாள் முழுவதும் பல நெருக்கடிகளைச் சகித்துக் கொண்டு பல ரோல்களில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இதையும் படிங்க: இங்கிலாந்து டெஸ்ட்.. வெஸ்ட் இண்டீஸ் மாஸ் பிளேயிங் XI.. வரலாற்று சாதனை வீரர் அறிமுகம்.. களைகட்டும் லார்ட்ஸ்

இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி நடத்திச் செல்ல அவர் மிகவும் சரியானவர் என்று நான் நினைக்கிறேன். டீம் இந்தியா பற்றிய அவருடைய தெளிந்த பார்வை, அவருடைய பெரிய அனுபவத்துடன் இணைந்து, உற்சாகமான மற்றும் விரும்பப்படும் இந்த பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதை நிலை நிறுத்துகிறது.அவர் இந்த புதிய பயணத்தை தொடங்கும் பொழுது பிசிசிஐ முழு ஆதரவளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -