சாம்சன் டெல்லிக்கு போய் இருக்கணும்.. சிஎஸ்கேவை விட அதுதான் பெஸ்ட் – அஸ்வின் தெரிவித்த கருத்து

0
58
Ashwin

சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாட விரும்பவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார். மேலும் அவர் டெல்லி அணிக்கு சென்று இருந்தால் இன்னும் அர்த்தம் உள்ளதாக இருந்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.

தற்போது ஐபிஎல் வட்டாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணி டிரேடிங் செய்யப்படுகிறார் என்கின்ற செய்தி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் விரும்பவில்லை

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேற விரும்புகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கிறது. என் பார்வையில் டெல்லி அணிக்கு சாம்சன் செல்வதற்காக அங்கிருந்து ஸ்டப்ஸ் மற்றும் சமீர் ரிஸ்வி இருவரும் கொடுக்கப்படுவதாக இருந்தது. இது டெல்லிக்கும் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சிறந்ததாக இருந்திருக்கும்”

” ஏனென்றால் டெல்லி மைதானம் ரன் அடிப்பதற்கு சிறந்ததாக இருக்கும். அங்கு சஞ்சு சாம்சன் செல்லும்பொழுது அவர் ரன்கள் எடுப்பதற்கு மிகவும் வசதியாக இருந்திருக்கும். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிடில் ஆர்டர் நல்ல வகையில் பலப்பட்டு இருக்கும்”

- Advertisement -

ஜடேஜா பார்த்துக் கொள்வார்

“ஜடேஜா சிஎஸ்கே அணிக்காக பலகாலமாக விளையாடி வருகிறார். மேலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இருப்பதை விட வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக இருக்கிறது. அவர் 190 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முடியாவிட்டாலும் கூட, இப்பொழுதும் அவர் சிறந்த பினிஷராக பார்க்கப்படுகிறார்”

இதையும் படிங்க : சாம்சன் வெளியேறினால், ரியான் பராக் கேப்டன் கிடையாது.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 அதிரடி வீரருக்கு வாய்ப்பு

“மேலும் அவர் இறுதிப் போட்டி மாதிரியான பெரிய போட்டியில் சிறப்பாக விளையாடக்கூடியவர். ராஜஸ்தான் அணியில் இளம் வீரர்கள் சாதாரண போட்டிகளை பார்த்துக் கொண்டால், அவர் இறுதிப் போட்டியை பார்த்துக் கொள்வார். மேலும் பந்து பெரிய அளவில் திரும்பாத ஜெய்ப்பூர் மைதானம் அவருக்கு மிகவும் சரியானதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -