தோனி கோலியை கம்பீருக்கு பிடிக்காதா?. உண்மை என்னனு எனக்கு தெரியும் – கம்பீர் சிறுவயது கோச் பேட்டி

0
149

இந்திய கிரிக்கெட் அணி தற்போது பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. கம்பீருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரை பிடிக்காது என்கிற ஒரு கருத்து நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில் கௌதம் கம்பீரின் சிறு வயது பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் அது குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தோனி விராட் கோலியை பிடிக்காது

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக திகழும் கௌதம் கம்பீர் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பையில் விளையாடியிருக்கிறார். இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கம்பீர் 97 ரன்கள் குவித்து வெளியேறிய பிறகு கேப்டன் மகேந்திர சிங் தோனி இறுதியாக களத்தில் நின்று 91 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இருக்கிறார். இதில் தனி ஒரு நபரை மட்டுமே வைத்து வெற்றியை குறிப்பிடக் கூடாது எனவும் அணி வீரர்கள் அனைவருமே இந்திய அணியின் வெற்றிக்காக உழைத்திருக்கின்றனர் என்றும் கம்பீர் கூறி இருக்கிறார்.

இதன் மூலமாக கம்பீருக்கு தோனியின் மீது சில தனிப்பட்ட வெறுப்பு இருக்கிறது என்று மக்களால் பேசப்பட்டது. அதேபோல ஐபிஎல் தொடரில் கம்பீர் மற்றும் கோலி ஆகியோரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் விராட் கோலி இடையேயும் கம்பீருக்கு சிறிய கருத்து வேறுபாடு இருப்பதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்த சூழ்நிலையில் இது குறித்து கம்பீரின் சிறு வயது பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தனிப்பட்ட வெறுப்புகள் எதுவும் இல்லை

இது குறித்து அவர் கூறும் போது “கௌதம் கம்பீர் தனிப்பட்ட முறையில் யாரையும் வெறுத்ததில்லை இது முற்றிலுமான உண்மை. கம்பீருக்கு தோனி பிடிக்காது என்று மக்கள் கூறுகிறார்கள். மேலும் விராட் கோலியையும் அவருக்கு பிடிக்காது என்று ஒரு கருத்து நிலவுகிறது. தனிப்பட்ட காரணிகளால் அவருக்கு ஒரு சில விஷயங்கள் பிடிக்கும், பிடிக்காமல் இருக்கும். ஆனால் கௌதம் கம்பீருக்கு யார் மீதும் தனிப்பட்ட வெறுப்பு என்பது இல்லை” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:55 ரன்.. 10 விக்கெட்டுகள்.. இஷான் கிஷான் அணியிடம் சிக்கிய தமிழ்நாடு.. ஒரே நாளில் 2 இன்னிங்ஸ்.. ரஞ்சி டிராபி

கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு தனக்கும் விராட் கோலிக்கும் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து கேட்டபோது, தனிப்பட்ட முறையில் அவருக்கும் எனக்கும் எந்த விதமான வாக்குவாதமும் கருத்து வேறுபாடு இல்லை எனவும், இந்திய அணிக்காக நாங்கள் இருவரும் இணைந்து ஒற்றுமையாக செயல்படுவோம் எனவும் கம்பீர் கூறியிருக்கிறார். பயிற்சியின்போது கூட கம்பீரும் விராட் கோலியும் இணைந்து செயல்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -