ரஞ்சி டிராபி போட்டிகள் அடுத்தடுத்து நடத்தப்படாமல், போட்டிகளுக்கு இடையே நீண்ட இடைவெளி விடப்படுவது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டுக்கு இதுபோன்ற அட்டவணை சரியானது அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ரஞ்சி டிராபி போட்டிகளுக்கு இடையே அதிக இடைவெளி இருப்பதால் வீரர்களின் போட்டி அனுபவம் பாதிக்கப்படலாம் என்றும், உள்ளூர் கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐபிஎல் ஏலத்தை கருத்தில் கொண்டு உள்நாட்டு கிரிக்கெட் அட்டவணை அமைக்கப்படக் கூடாது என்பதே அவரது கருத்தாக உள்ளது.
இதுகுறித்து கவாஸ்கர் கூறும் போது “முதல் தர கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ரஞ்சி டிராபி போட்டிகளுக்கு இடையில் இவ்வளவு பெரிய இடைவெளி இருப்பது சரியான விஷயம் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.