கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

கம்பீர் செய்வது என்ன அர்த்தம்.. ஒன்னுமே புரியல.. கில்லுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கு.. ஆகாஷ் சோப்ரா கருத்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மாவை ஆட வைத்தது குறித்து அணி நிர்வாகத்தை முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா,
கேள்வி எழுப்பியுள்ளார். சுப்மன் கில் தொடக்க வீரராக விளையாடத் தொடங்கியபோது, இந்திய அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜிதேஷ் இருப்பார் எனக் கருதப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில், 2025 ஆசிய கோப்பையில் அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹோபார்ட்டில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

என்ன அர்த்தம்:

இலக்கை துரத்திய இந்தியா, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 9 பந்துகள் மீதமிருக்க ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி பெற்றது. ஜிதேஷ் 13 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 22 ரன்கள் எடுத்தார். இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா,  “ஜிதேஷ் ஷர்மா ஆடியுள்ளார். சஞ்சு சாம்சன் ஆடவில்லை. இதற்கு என்ன அர்த்தம்?

ஏனெனில் நாம் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏன் தர்க்கத்தைத் தேடுகிறோம்? ஷுப்மன் கில் தொடக்க வீரராக விளையாடத் தொடங்கியபோது, ஜிதேஷ் ஷர்மா கீழ் வரிசையில் மட்டுமே ஆடுவார் எனக் கருதப்பட்டது. முழு ஆசியா கோப்பையும் கடந்து அவர் ஆடவில்லை. முதலில் சஞ்சு கீழ் வரிசையில் ஆடினார். பின்னர் மேல் வரிசையில். சஞ்சு இறுதிப் போட்டியிலும் ஆடி சில முக்கிய ரன்களை எடுத்தார்.

- Advertisement -

இப்போது ஒரு இன்னிங்ஸில் அவரை எண் 3-க்கு அனுப்பி, அதன் பிறகு கைவிடப்பட்டார். சஞ்சுவின் ரசிகர்கள்  கோபப்படுவார்கள். அது சரியானதே.  ஆனால் இதில் எந்த உறுதித்தன்மையும் இல்லை. அவர் இருக்க மாட்டார். ஜிதேஷ் ஷர்மா மட்டுமே ஆடுவார் என்று, ஏனெனில் இது  சீரற்ற தேர்வு,” என்று அவர்  கூறினார்.

கில் தடுமாறுகிறார்:

2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் இடம்பெற்று துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, கேரள விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு தள்ளப்பட்டார். ஆசிய கோப்பை தொடரில் நான்கு இன்னிங்ஸ்களில் 124.52 ஸ்ட்ரைக் ரேட்டில் 132 ரன்கள் எடுத்த அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 3வது வீரராக களமிறங்கி  2 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இடத்தை இழந்தார். இது குறித்து பேசிய ஆகாஷ், “ஷுப்மன் கில்லைப் பற்றி பேச வேண்டும்.  ஏனெனில் அவர் ரன்கள் எடுக்க முடியவில்லை. முதல் போட்டியில் கான்பெராவில் நன்றாக ஆடினார்.”

இதையும் படிங்க: கம்பீர் அந்த பிளேயருக்கு செய்யறது சரி கிடையாது.. அந்த வீரர் தமிழ்நாட்டு வீரருடன் பேச வேண்டும் – ஜாகீர் கான் அறிவுரை

” மெல்போர்னில் பந்து அவரது தலைமீது பட்டது. சற்று தளர்வான ஷாட்டும் ஆடினார். நீங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகிறீர்கள். இது நல்லதல்ல. ஷுப்மன் கில் பார்மில் இல்லை என்று ஒரு முறைகூட கூற மாட்டேன். ஏனெனில் 2025-ல் அவர் அபாரமான பார்மில் இருந்தார். ஆனால் தற்போது ரன்கள் குறைவு. ஒருநாள் தொடர், ஆசிய கோப்பை, இப்போது இது. ஷுப்மன் கில் மீதமுள்ள இரு போட்டிகளில் ரன்கள் எடுக்க வேண்டும்” என்று சோப்ரா கூறியுள்ளார்.

- Advertisement -
Published by