தற்போது இந்திய டி20 அணியில் வீரர்களை பல இடங்களுக்கு மாற்றி பயன்படுத்தும் விதம் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஜாகிர் கான் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்றைய போட்டியில் ஆறாவது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் விளையாடினார். அதே சமயத்தில் இரண்டு போட்டிகளிலும் தொடர்ச்சியாக சிவம் துபே எட்டாவது இடத்தில் அனுப்பப்படுகிறார். குறிப்பாக ஹர்ஷித் ராணாவை அவருக்கு முன்னே அனுப்பியது பெரிய அதிர்ச்சியை உருவாக்கியது.
இது வீரரை பாதிக்கும்
இதுகுறித்து ஜாகிர் கான் பேசும் பொழுது “தற்போது சிவம் துபே எந்த இடத்தில் இருக்கப் போகிறார் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. அவர் திடீரென இப்பொழுது பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்திற்கு அனுப்பப்படுகிறார். அவருக்கு பேட்டிங் செய்ய அதிக வாய்ப்புகள் கிடைக்காது. இதனால் நிச்சயம் அவர் அழுத்தத்தை உணர்வார். நீங்கள் வழக்கமான இடத்தில் இருந்து ஒரு பேட்ஸ்மேனுக்கு புதிய பொறுப்பை கொடுப்பதாகவோ அல்லது ஆட்டத்தை முடிக்க சொல்லியோ கீழே தள்ளுவது நல்ல அறிகுறி கிடையாது”
“நேற்று ஆட்டத்தை வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவருமே முடிந்து விட்டதை நாம் பார்த்தோம். கடந்த போட்டியில் கிடைத்த வாய்ப்பில் சிவம் துபே ஆட்டம் இழந்தார். இது அவருக்கு நிச்சயம் அழுத்தத்தை உருவாக்கி இருக்கும். அணிக்கு உள்ளே வெளியே என இருக்கும் பொழுது மனநிலையை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து, சிவம் துபே வாஷிங்டன் சுந்தரிடம் பேசி தெரிந்து கொள்ள வேண்டும்”
ஜிதேஷ் சர்மா விடமாட்டார்
” தற்போது நாம் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு டெம்ப்ளேட்டுக்கு விளையாடுவது மற்றும் பேட்டிங் வரிசையில் புதிய இடத்தில் விளையாடுவது பற்றியது. இதில் சஞ்சு சாம்சன் தடுமாறி வருகிறார். இது அவருக்கு சவாலாக இருக்கிறது. அணியில் இது பற்றி ஏதோ பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. இதனால்தான் ஜிதேஷ் சர்மா கொண்டுவரப்பட்டிருக்கிறார்”
இதையும் படிங்க : அக்சர் பேட்டிங்கில் செஞ்ச அந்த தப்பை வாஷிங்டன் சுந்தர் செய்யல.. இவர விடவே கூடாது – இர்பான் பதான் பேச்சு
” நாம் இன்னும் கொஞ்சம் முன்னோக்கி செல்லும் பொழுது சில விஷயங்களை பார்க்க போகிறோம். குறிப்பிட்ட இடத்தில் விளையாடுவதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளும் வீரர்கள் எளிதாக அந்த இடத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். இந்த நிலையில் இல் வரிசையில் விளையாடுவதற்காகவே தயாராகி இருக்கும் ஜிதேஷ் சர்மா அந்த இடத்தில் ஒட்டிக் கொள்வார்” என்று கூறி இருக்கிறார்.






