இந்திய கிரிக்கெட்

விராட் கோலி போனா போகட்டும்.. கவலைப்பட ஒன்னும் இல்ல.. இதுதான் காரணம் – கங்குலி பேட்டி

இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி ஓய்வு பெற்று விட்டாலும் இந்திய கிரிக்கெட் பெரிய அளவில் பாதிக்கப்படாது என்று இந்திய முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரிய சேர்மன் சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மட்டுமே ஓய்வு பெறாமல் இருந்து வருகிறார். ஆனால் பிசிசிஐ அடுத்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரை விராட் கோலியை விளையாட வைக்க விரும்பவில்லை என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கும் கருத்து சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விராட் கோலியின் நிலை என்ன?

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் என்ன மாதிரியான எதிர்காலத் திட்டங்களை வைத்திருக்கிறார்கள் என்று கேட்டு தெரிந்து கொள்ள பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இப்பொழுது அவர்களை இன்னும் இரண்டு ஆண்டு காலம் தொடர்ந்து கூட்டிச் செல்ல முடியாது என்பதையும் பிசிசிஐ கூறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விராட் கோலி நல்ல உடல் தகுதியுடன் காணப்படுகிறார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சீராக விளையாட விட்டாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய பேட்டிங் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இன்றும் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் அவர் ஓய்வு பெறுவது குறித்து பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த மூன்று வீரர்கள் இருக்கிறார்கள்

இதுகுறித்து சவுரவ் கங்குலி பேசும் பொழுது ” இந்தியாவில் எந்த அளவுக்கு கிரிக்கெட் திறமை இருக்கிறது என்று நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இங்கு கவாஸ்கர் போனால் டெண்டுல்கர் வருவார். அவருடன் சேர்ந்து டிராவிட், லட்சுமணன், சேவாக் ஆகியோர் வருவார்கள். இவர்களைத் தொடர்ந்து விராட் கோலி வந்தார். இப்பொழுது விராட் கோலி சென்றால் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் மற்றும் கில் இருக்கிறார்கள்”

இதையும் படிங்க: இந்த 2 வீரர்களும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை.. பிரபல வீரருக்கு 4 மதிப்பெண் வழங்கிய இர்பான் பதான்

“நல்ல கிரிக்கெட் கட்டமைப்பு இருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு மிகவும் சிறந்தது. இங்கு எல்லாம் மட்டத்திலும் கிரிக்கெட் விளையாடுவதற்கு அமைப்பு இருக்கிறது. ஜூனியரில் ஆரம்பித்து சீனியர் வரையில் பல்வேறு வகைகளில் இங்கு கிரிக்கெட் விளையாட முடியும். எனவே இந்தியாவிலிருந்து நிறைய கிரிக்கெட் தலைமைகள் வந்து கொண்டே இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts