இந்திய டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில்லை கேப்டனாக கொண்டுவரப்பட்ட நிகழ்வு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன் பின்னணியில் என்ன நடந்தது என தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறியிருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து வந்த ரோஹித் சர்மா திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். உடனடியாக விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார். இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார்.
மிகப்பெரிய சோதனை
சுப்மன் கில் அது வரையில் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் சதங்கள் எதுவும் அடித்திருக்கவில்லை. மேலும் அவருடைய டெஸ்ட் ரன் ஆவரேஜ் 35 என மிகவும் சுமாராக இருந்தது. மேலும் அவர் டெஸ்டில் பெரிய பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் இருந்து வந்தார்.
அதே சமயத்தில் இந்திய டெஸ்ட் அணியில் மூத்த வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பன்ட் இருவரும் அனுபவசாலிகளாக மட்டும் இல்லாமல் ரன் எடுப்பவர்கள் ஆகவும் இருந்தார்கள். இதில் கேஎல்.ராகுல் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணிக்கு இடைக்கால கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். இந்த நிலையில்தான் கம்பீர் மற்றும் அகக்கர் இருவரும் சேர்ந்து சுப்மன் கில்லை கேப்டன் ஆக கொண்டு வந்திருக்கிறார்கள்.
எனக்கு ரன் முக்கியமில்லை
இது குறித்து கம்பீர் பேசும் பொழுது “கில்லை கேப்டனாக கொண்டுவரும் முடிவு எடுக்கப்பட்ட பொழுது நான் அவருடன் பேசியது எனக்கு முழுமையாக ஞாபகம் இருக்கிறது. அவரிடம் நான் ஒரு விஷயத்தை சொன்னேன். நாங்கள் உன்னை ஆழ்கடலில் பிடித்து தள்ளி விடுகிறோம். ஒன்று நீ மூழ்கி விடுவாய் அல்லது சிறந்த நீச்சல் வீரனாகி விடுவாய் என்று சொன்னேன்”
இதையும் படிங்க: 134 ரன்.. தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் முதல் தோல்வி.. நமிபியா நம்ப முடியாத வெற்றி.. இது தேவையா?
“இங்கிலாந்து தொடரில் 750 ரன் மேலே எடுத்தார். ஆனால் எனக்கு அது முக்கியம் கிடையாது. ஆனால் ஒரு இளம் கேப்டனாக அந்த அணியை அவர் எப்படி வழி நடத்தினார்? அழுத்தமான சூழ்நிலையை எப்படி கையாண்டார்? என்பதுதான் எனக்கு முக்கியமானது. அவர் இந்த விஷயத்தில் மிகவும் சிறப்பாக இருந்தார். கேப்டன் பொறுப்புக்கு இதை விட சோதனை இருந்து விட முடியாது” என்று கூறி இருக்கிறார்.






