நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி உடன் ஆட மாட்டோம் என பாகிஸ்தான் எடுத்த முடிவு அர்த்தமற்றது என சவுரவ் கங்குலி கூறியிருக்கிறார். மேலும் இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரை வெல்லும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணி அமெரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 76 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து மிகவும் தடுமாறியது. அந்த நேரத்தில் இந்திய அணி அமெரிக்க அணியிடம் தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் உருவானது. பிறகு சூரிய குமாரின் ஆட்டத்தால் இந்திய அணி வென்றது.
பாகிஸ்தான் முடிவு தவறானது
மேலும் தற்போது இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் விளையாட மாட்டோம் என்று அறிவித்திருப்பது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. டி20 உலக கோப்பை தொடரின் போட்டிகளை தாண்டி இந்த விஷயம் மிகப்பெரிய முக்கியத்துவத்தை பெற்று விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சவுரவ் கங்குலி கூறும் பொழுது “பாகிஸ்தான் தற்போது உலக கோப்பையில் இருந்து பின் வாங்குவது எதற்காக? அவர்கள் எப்படியும் இப்பொழுது இந்தியாவில் விளையாடவில்லை இலங்கையில்தான் விளையாடுகிறார்கள். இந்த நிலையில் அவர்கள் இந்தியாவுடன் ஆடமாட்டோம் என்று சொன்னது ஆச்சரியமாகவும் அர்த்தமற்றதாகவும் இருக்கிறது. உலகக் கோப்பையில் ஒவ்வொரு புள்ளிகளும் மிகவும் முக்கியம்”
இந்திய வீரர்களும் மனிதர்கள்தானே
“டி20 கிரிக்கெட் என்றால் நீங்கள் தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்திய வீரர்கள் மிகவும் சிறப்பானவர்கள் அவர்கள் தொடர்ந்து இதை செய்து வந்து கொண்டு இருக்கிறார்கள். அதேசமயத்தில் இந்திய வீரர்களும் மனிதர்கள்தான். எனவே அவர்கள் வழியில் செல்லாத போட்டிகளும் இருக்கவே செய்யும்”
இதையும் படிங்க: முதல் போட்டியே இப்படி ஆயிடுச்சு.. ஆனா சூர்யாவுக்கு இது ரொம்ப பெஸ்ட் போட்டியா மாறிடுச்சு – கம்பீர் பாராட்டு
“இந்திய அணி பொறுத்த வரையில் மூன்று துறைகளிலும் மிகவும் சிறப்பாக இருக்கின்ற ஒரு அணி. அவர்கள் தொடர்ந்து உலகக் கோப்பையில் செல்லும் பொழுது இன்னும் சிறப்பாக விளையாட ஆரம்பிப்பார்கள். இந்தியாதான் என்னுடைய ஃபேவரைட். நிச்சயம் இந்திய அணி t20 உலகக்கோப்பையை வெல்வார்கள்” என்று கூறியிருக்கிறார்.






