இந்திய கிரிக்கெட்

2027 வேர்ல்ட் கப்புக்கு ஸ்கெட்ச் ஆரம்பிக்கப் போறேன்.. இந்த விஷயத்தை எல்லாம் செஞ்சாகனும் – கம்பீர் பேச்சு

அடுத்த வருடம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான திட்ட உருவாக்கம் சீக்கிரத்தில் ஆரம்பிக்கப்படும் என கம்பீர் சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை இந்திய அணி சிறப்பாக விளையாடி வென்றது. இதைத்தொடர்ந்து இந்திய வீரர்கள் அனைவரும் அடுத்து நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கு தயாராகும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாறும் கவனம்

தற்போது டி20 உலகக் கோப்பை தொடர் முடிவடைந்துள்ளதால், அடுத்த வருடம் நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி நிர்வாகத்தின் கவனம் முழுமையாக மாறும். மேலும் இந்திய அணியில் சில இடங்களுக்கு எந்த வீரர்கள் சரியாக இருப்பார்கள்? என்ற தேடல்கள் ஆரம்பித்து விடும்.

உதாரணமாக இப்பொழுது முதல் விக்கெட் பெறாத கேஎல்.ராகுல் இருந்து வருகிறார். இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்துக்கு சமீபத்தில் ரிஷப் பண்ட் இருந்தார். ஆனால் தற்போது அந்த இடத்திற்கு சஞ்சு சாம்சானை கொண்டு வருவது பற்றி யோசிப்பார்கள் என்று கூறப்படுகிறது. எனவே நிறைய மாறுதல்கள் நடைபெற வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

இங்கிருந்து ஆரம்பிப்போம்

இது குறித்து கம்பீர் பேசும் பொழுது “2027 உலக கோப்பைக்கான திட்டங்கள், இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவு ஆரம்பிக்கப்படும். இடையில் 25 முதல் 30 போட்டிகள் மட்டுமே இருக்கிறது. இந்த வடிவத்திற்கு தற்போது நிறைய போட்டிகள் நடத்தப்படுவதில்லை. எவ்வளவு சீக்கிரமாக திட்டமிடல்கள் தொடங்குகிறோமோ அவ்வளவு நல்லதாக அமையும்”

இதையும் படிங்க : இனி இந்திய கிரிக்கெட்டுக்கும் மற்ற நாடுகள் கிரிக்கெட்டுக்கும் பெரிய இடைவெளி உருவாகும்.. ஒன்றுமே செய்ய முடியாது – இங்கிலாந்து முன்னாள் வீரர்கள்

“தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் விளையாடுவதற்கு கடினமான இடம். எனவே அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு காமினேஷனை கண்டுபிடிக்க வேண்டும். தேர்வாளர்களும் பயிற்சியாளர்களும் இதைச் செய்வார்கள். ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இதற்கான மேப் உருவாக்கப்படும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Gambhir

Recent Posts