டி20 உலககோப்பை.. இந்த டீம்கிட்ட கவனமா இருங்க.. விட்டா சாம்பியன் ஆயிடுவாங்க – கவுதம் கம்பீர் பேட்டி

0
1170
Gambhir

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கம்பீர் மென்டராக வழி நடத்திய கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில் ஒரு அணியாக அவர்கள் செயல்பட்டதில் பலவீரர்கள் வெற்றிக்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இது குறித்து கம்பீர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

குறிப்பாக வெஸ்ட் இன்டீஸை சேர்ந்த சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரசல் இருவரும் மிகச் சிறப்பான முறையில் விளையாடியிருந்தார்கள். சுனில் நரைன் 488 ரன்கள் மற்றும் 18 விக்கெட்டுகள் எடுத்திருக்க, இன்னொரு பக்கத்தில் ரசல் பந்துவீச்சில் அசத்தி 19 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். இப்படி எதிர்பாராத துறைகளில் இருவரும் ஏற்படுத்திய தாக்கம் கொல்கத்தா அணியை இன்னொரு உயரத்திற்கு எடுத்துச் சென்றது.

- Advertisement -

சுனில் நரைன் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்காக மீண்டும் களமிறங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதற்காக ரசல் முடிந்தவரை முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த இருவர் குறித்தும் கம்பீர் நிறைய பாராட்டி பேசி இருக்கிறார்.

இதுகுறித்து கம்பீர் பேசும் பொழுது “தொடர் முடிவில் சுனில் நரைனுக்கு மோஸ்ட் வேலிபல் பிளேயர் விருது வழங்கப்பட்டது. ஆனால் அவர் எப்பொழுதுமே கொல்கத்தா அணியின் இப்படிப்பட்ட வீரராக தான் இருந்திருக்கிறார் என்பதை நீங்கள் புள்ளி விவரத்தை எடுத்துப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அவர் தொடர் தொடங்குவதற்கு முன்பே எங்கள் அணியின் மதிப்பு மிக்க வீரராக இருந்தார். அவரிடமிருந்து பார்க்க இன்னும் நிறைய இருக்கிறது. அவர் கொல்கத்தா மற்றும் உலக கிரிக்கெட்டுக்கு கொடுப்பதற்கு நிறைய திறமை வைத்திருக்கிறார்.

நிச்சயமாக பந்துவீச்சில் ரசலை ஸ்ரேயாஸ் ஐயர் பயன்படுத்திய விதத்திற்காக அவர் பாராட்டுக்குரியவர். மற்ற அணிகளில் யாராவது ஒரு வீரர் 17 அல்லது 18 விக்கெட்டுகள் எடுத்தவராக இருக்கிறார். ஆனால் இங்கே எங்களது ஆறாவது பந்துவீச்சாளர் ஆன ரசல் மட்டுமே 19 விக்கெட் எடுத்திருக்கிறார். இதிலும் சில முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 4 வீரர்கள்.. 4 வித்தியாசமான பிளேயிங் XI.. ரோகித் டிராவிட்டின் மெகா பிளான்.. டி20 உலக கோப்பை

தற்போது நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மற்ற அணிகளுக்கு வெஸ்ட் இண்டிஸ் அணி மிகவும் அச்சுறுத்தல் தரக்கூடிய அணியாக இருக்கும். ஏனென்றால் அவர்களிடம் சாம்பியன் ஆவதற்கான எல்லா விஷயங்களுமே இருக்கிறது” என்று உறுதியாகக் கூறியிருக்கிறார்.