இங்கிலாந்து அணியின் நட்சத்திர டெஸ்ட் வேகப்பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு தனது ஓய்வினை அறிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய வீரர் ஒருவருக்கு பந்து வீசிய அனுபவம் குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
2003ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன் அதன் பிறகு தனது திறமையான பந்துவீச்சின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்தார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக ஐம்பதாயிரம் பந்துகளுக்கு மேல் வீசிய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையும் பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவே லண்டனில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியோடு தான் ஓய்வு பெறப் போவதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பிறகு பேசிய ஜேம்ஸ் ஆண்டர்சன் தான் விராட் கோலிக்கு பந்து வீசிய நினைவுகள் குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது “கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஏற்ற இறக்கங்கள் என்பது பொதுவாக நிச்சயம் இருக்கும். உங்களது செயல்பாடுகள் மூலம் சில தொடர்களை நீங்கள் ஆச்சரியமாக உணர்வீர்கள்.
ஆனால் சில தொடர்கள் உங்களுக்கு சரியாக அமையாது. முந்தைய நாட்களில் விராட் கோலிக்கு எதிராக விளையாடும் போது அவரை எனது ஒவ்வொரு பந்திலும் அவுட் ஆக்க முடியும் என்ற உணர்வு இருந்தது. ஆனால் தற்போது அவரை அவ்வளவு எளிதாக வெளியேற்ற முடியாது என்பது உண்மை. எந்த சூழ்நிலையிலும் நான் என்னை பெரிதாக நினைத்துக் கொண்டது இல்லை. ஒரு தொடர் விளையாடி முடித்து விட்ட பின்னர் அடுத்த தொடருக்கு எப்படி தயாராகலாம் என்பது குறித்து மட்டுமே சிந்திப்பேன். அதுதான் எனக்கு நீண்ட காலம் விளையாட உதவியது.
நான் விளையாட்டை மிகவும் நேசித்த விதம், எனது செயல்பாட்டின் மூலம் மக்கள் கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதை நான் விரும்புகிறேன். ஸ்விங் பந்துவீச்சு கலையை நான் பந்து வீச ஆரம்பித்ததற்கு பின்னர் மக்கள் அதை கையில் எடுத்தார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியான உணர்வை தருகிறது. இது ஒரு அற்புதமான உணர்வு. இளம் தலைமுறைகள் இனிவரும் காலங்களில் கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2024ல் இந்த பையனோட விக்கெட்தான்.. வாழ்நாளில் என் 2வது சிறந்த பந்து.. ஸ்டார்க் ஓபன் டாக்
ஓய்வு பெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு சச்சின் டெண்டுல்கர் உட்பட பல முன்னணி ஜாம்பவான்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு முன்னர் இவரது சக பந்துவீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சில காலம் கிரிக்கெட் விளையாடி ஆண்டர்சன் தற்போது இவரும் தனது ஓய்வினை அறிவித்து இருக்கிறார்.






