இந்திய அணி உள்நாட்டில் அடுத்தடுத்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக மொத்தமாக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் மற்றும் பிளன் மெக்ராத் சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு அமைந்திருக்கிறது.
இந்திய அணி தொடர்ந்து பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் ஐந்து டெஸ்ட் என மூன்று தொடர்களில் பங்கேற்க இருக்கிறது.
500 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்
இந்த ஆண்டு துவக்கத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருந்தது. இந்த தொடரில் தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நூறாவது டெஸ்டில் பங்கேற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் இதே தொடரில் 500வது சர்வதேச டெஸ்ட் விக்கட்டையும் கைப்பற்றி அசத்தினார்.
தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளே முதலிடத்தில் இருக்க ரவிச்சந்திர அஸ்வின் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் தற்போது 516 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாதன் லயன் – கிளன் மெக்ராத்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்குவிளையாட வாய்ப்புகள் குறைவு. ஆனால் உள்நாட்டில் நடைபெற இருக்கும் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவார். இதன் மூலம் அதிக சர்வதேச டெஸ்ட் விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 519 விக்கெட் கூட இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கோர்ட்னி வால்ஸை உடனடியாக முந்தி விடுவார்.
இதையும் படிங்க : கடைசி நேரத்தில் இஷான் கிஷானை.. டீமை மாற்றி இறக்கிய பிசிசிஐ.. துலீப் டிராபியில் ஆச்சரியம்.. காரணம் என்ன?
இதற்கு அடுத்து ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் 530 விக்கெட்டுகளுடன் இருக்கிறார். இவரைத் தொடர்ந்து கிளன் மெக்ராத் 563 விக்கெட்டுகள் உடன் இருக்கிறார். நாதன் லயனை எப்படியும் ரவிச்சந்திரன் அஸ்வின் தாண்டி விடுவார். ஆனால் கிளன் மெக்ராத்தை தாண்டுவதற்கு 48 விக்கெட் தேவைப்படுகிறது. இந்தியாவில் ஐந்து டெஸ்ட் போட்டிகளை தாண்டி ஆஸ்திரேலியாவிலும் விளையாடுவதற்கு வாய்ப்புகள் அமைந்தால், அடுத்த பத்து போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதை உடைப்பதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உண்டு!