இந்திய கிரிக்கெட்

தம்பி தினுஷா நீ செஞ்சது அற்புதம்.. என் பசங்களும் இதுல செம்மையா பண்ணாங்க – கம்பீர் பாராட்டு

கொழும்புவில் இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் மேட்ச் டிராவில் முடிந்த நிலையில், இந்திய பிளேயர்களின் கேரக்டர் மற்றும் இலங்கை பேட்ஸ்மேன் சோனல் தினுஷாவின் அபார ஆட்டத்தை இந்திய ஹெட் கோச் கௌதம் கம்பீர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

- Advertisement -

​இலங்கை அணிக்கு எதிராக இந்திய டீம் ஃபாலோ-ஆன் கொடுத்த பிறகும், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை பேட்ஸ்மேன்கள் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் வெற்றியை நோக்கி சென்ற இந்திய டீமால் மேட்சை பினிஷ் செய்ய முடியாமல் போனது.

​இந்த தொடரில் அபாரமாக ஆடிய சோனல் தினுஷா இரண்டு இன்னிங்ஸ்களிலும் செஞ்சுரி அடித்து இந்திய பவுலர்களுக்கு கடும் பிரஷர் கொடுத்தார். இருப்பினும் இந்திய டீம் இந்த டெஸ்ட் சீரிஸை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி டிராபி வென்றது.

​இதுகுறித்து சோசியல் மீடியா தளமான எக்ஸ் பக்கத்தில் கௌதம் கம்பீர் பதிவிட்டு இருக்கும் கருத்துகளில் “டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கேரக்டர், பேஷன்ஸ் மற்றும் மென்டல் டப்னஸ் மிகவும் முக்கியம். அதை நம்ம பாய்ஸ் அழகாக வெளிப்படுத்தினார்கள்!” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் அந்த பதிவில் தொடர்ந்து பேசிய அவர் “சிறப்பு பாராட்டுக்கள் சோனல் தினுஷாவிற்கு சேரும். அவருடைய எக்ஸப்ஷனல் பெர்ஃபார்மன்ஸ் உண்மையிலேயே மிக அற்புதம்!” என்று கூறி முடித்துள்ளார்.

- Advertisement -
Published by