கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

கம்பீருக்கு இன்னொரு முகமும் இருக்கு ; இந்திய ஸ்பின்னர் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ததற்கு நன்றி கூறி வெளியிட்ட பரபரப்பான செய்தி!

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் விராட் கோலி கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது!

- Advertisement -

அதற்கு முன்பு பெங்களூர் வந்து லக்னோவா அணி விளையாடிய ஆட்டத்தில் கம்பீர் பெங்களூர் ரசிகர்களை நோக்கி வாய் மேல் விரல் வைத்து சைகை செய்தது பிரச்சனையானது.

தற்பொழுது வரை இருதரப்பிலும் இந்த பிரச்சனைகள் சமூக வலைதளங்களில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

இவர்கள் பிரச்சனை தொடர்பாக முன்னாள் வீரர்கள் பலரும் தங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை இது இள வீரர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமையும் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

கம்பீர் பற்றி சமூகவலைதளத்தில் இப்படியான ஒரு முகம் மட்டுமே தொடர்ச்சியாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரது இன்னொரு முகம் குறித்து இந்திய முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ராகுல் சர்மா வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் தெரிய வருகிறது!

ராகுல் ஷர்மா கூறுகையில் “கடந்த மாதம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. என் மாமியாருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தார். இந்த நேரத்தில் கம்பீர் பாஜி மற்றும் அவரது உதவியாளர்தான் எனக்கு உதவினார்கள். மேலும் அவர் குறுகிய காலத்தில் எனக்கு சிறந்த நரம்பியல் நிபுணரையும் மருத்துவமனையையும் அறிமுகப்படுத்தினார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. மிக்க நன்றி!” என்று கூறியிருக்கிறார்!

தற்பொழுது சமூக வலைதளத்தில் கம்பீரின் இந்த உதவி குறித்து நல்ல விதமாக அவரைப் பற்றி பேசி வருகிறார்கள். எல்லா வீரர்களுக்குமே வெளியில் தெரியாத ஒரு நல்ல முகம் இருந்துதான் வருகிறது!

- Advertisement -
Published by