“இது தேவையே இல்லாதது”- ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்தது குறித்து கம்பீர், அக்ரம், ரவி சாஸ்திரி விமர்சனம்!

0
71
Rishab pant

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் 15ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இரண்டாவது சுற்றின் இரண்டாவது போட்டியில் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் மோதின!

உலகத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் ரசிகராக இருந்து அந்த போட்டியை பார்த்திருந்தாலும் அவரின் பிரஷர் உச்சக்கட்டத்தில்தான் இருந்திருக்கும். அந்த அளவிற்கு நேற்றைய போட்டி ஏற்ற இறக்கங்களோடு இரு அணிக்கும் அமைந்து, இறுதியில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்திய அணி நேற்று முழுமையாக தைரியமாக அடித்து ஆடுவதுதான் என்கின்ற முடிவோடு களத்திற்கு வந்திருந்தது. இந்திய அணியின் துவக்க ஜோடி கேஎல் ராகுல் ரோஹித் சர்மா 4.2 ஓவர்களில் 50 ரன்களை அணிக்குக் கொண்டு வந்தார்கள். இந்திய அணிக்கு சிறந்த பவர் பிளே ஸ்கோர் கிடைத்தது.

ஆனால் தைரியமாக ஆடுவது என்கின்ற முடிவே இந்திய அணிக்கு ஒருவிதத்தில் ஆட்டத்தின் பிற்பகுதியில் பாதகமாக அமைந்தது. இந்திய அணியின் துவக்க ஜோடி தலா 28 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 60 ரன்கள் அடித்தார். இதற்கடுத்து அணியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் 18. வீரர்கள் வருவதும் போவதுமாய் இருந்ததால் 10 முதல் 20 ரன்கள் குறைவாய் போய்விட்டது.

நேற்றைய ஆட்டத்தில அணியில் தக்க வைக்கப்பட்ட விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி, இறுதியில் தாக்கி ஆட விக்கெட்டுகள் கைவசம் வைக்க வேண்டிய நிலையில், திடீரென்று தேவையில்லாமல் ஒரு வித்தியாசமான ஷாட் ஆடப் போய் ஆட்டமிழந்தார். அதற்கடுத்து வந்த ஹர்திக் பாண்டியா முதல் பந்திலேயே வெளியேறினார். இதெல்லாம் சேர்ந்து இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது.

- Advertisement -

ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்தது குறித்து கிரிக்கெட் முன்னாள் வீரர்களான இந்திய அணியின் கௌதம் கம்பீர், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி மற்றும் பாகிஸ்தான் அணி வீரரான வாசிம் அக்ரம் மூவரும் ஒரு விவாதத்தில் தங்களது கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

கௌதம் காம்பீர் : ரிஷப் பண்ட் நிச்சயம் ஏமாற்றம் அடைவார். இது அவருடைய ஷாட் அல்ல. அவருடைய ஷாட் லாங் ஆன் இல்லை டீப் மிட்விக்கெட்டில் அடிக்கப்பட்டு இருக்கலாம். அவர் அங்கு அடித்து ஆட்டமிழந்து இருக்கலாம். நிச்சயமாக அவரால் அங்கு அடிக்க முடியும். அதுதான் உங்கள் பலம். ரிவர்ஸ் ஸ்வீப் உங்கள் பலம் அல்ல!

வாசிம் அக்ரம் : குறிப்பாக கௌதம், ஆட்டத்தில் அந்த நேரத்தில் ரிஷப் பண்ட் அந்த ஷாட்டை ஆட வேண்டிய தேவையே கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஷாட்டை அவர் ஆடுவார் என்று எனக்கு தெரியும். அவர் உலக கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவர் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் இந்த ஆட்டத்தில் இந்தக் கட்டத்தில் அந்த ஷாட் தேவையில்லை!

ரவி சாஸ்திரி :
குறிப்பாக ரோகித் சர்மா கேஎல் ராகுல் எப்படி ஆடி ரன் கொண்டு வந்தார்கள் என்று நாம் பார்த்தோம். அவர்கள் மைதானத்தோடும் “வி”யில் ஆடி ரன் கொண்டுவந்தார்கள். பந்து ஸ்கிட்டாகி பேட்டுக்கு நன்றாக வந்தது. இப்படி இருக்கும்போது உங்கள் பலம் எதுவோ அந்த பலத்தில் ஷாட் ஆட வேண்டும். ரிஷப் பண்ட்க்கு பெரிய பவுண்டரி எல்லைகள் என்று எதுவும் கிடையாது. அவரால் எவ்வளவு பெரிய சிக்ஸரையும் அடிக்க முடியும். நீங்கள் சொல்வது ரொம்ப சரி!